இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), மணிப்பால் சிக்கனா ஹெல்த் இன்சூரன்ஸில் 50% பங்கை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதன் எதிரொலியாக LIC இன் பங்குகள் NSE இல் ரூ.952.50 உடன் கிட்டத்தட்ட 5% உயர்ந்துள்ளன. இருப்பினும், மதிய வர்த்தகத்தில் விற்பனை அழுத்தத்தின் காரணமாக பங்கு விலை சரிந்து, LIC பங்குகள் வர்த்தக முடிவில் 2.54 சதவீத உயர்வுடன் ரூ.939.55 முடிந்தது.
மருத்துவ காப்பீட்டு சந்தையில் தற்போது போதுமான அளவு சேவைகள் இல்லாத நிலையில், ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பங்கு வாங்குவது மூலம் LIC இத்துறைக்குள் நுழைய உள்ளது. ஆனால் மணிப்பால் சிக்கனா ஹெல்த் இன்சூரன்ஸில் 50% பங்கை வாங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

எல்ஐசி திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மணிப்பால் சிக்கனா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், சிக்கனா மற்றும் மணிப்பால் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்கள் பங்கு இருப்பை குறைக்கும். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், மணிப்பால் சிக்கனா ஹெல்த் இன்சூரன்ஸ் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீடு செய்யப்பட்டில் 2000 கோடி ரூபாய்க்கு 50 சதவீத பங்குகளை விற்பனை செய்யலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் தனது காலடி எடுத்து வைக்க தயாராகி வருகிறது. ஆயுள் காப்பீட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள LIC, ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நுழைவதன் மூலம் தனது வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் உலகெங்கிலும் மக்களை பாதித்த நிலையில், இந்தியாவிலும் மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து அதிக அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் மீதான தேவை அதிகரித்துள்ளது.
மேலும், ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் செயல்முறைகளில் பல மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சாதகமான சூழல், LIC-க்கு ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நுழைவதற்கான சரியான தருணமாக அமைந்துள்ளது.
LIC-யின் தலைவர் சித்தார்த் மோஹந்தி சில மாதகங்களுக்கு முன்பு பேசிய போது, நிறுவனம் தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் உள்ள நிறுவனங்களை கையகப்படுத்துவதன் மூலம் இந்தத் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.
இதன் மூலம், LIC தனது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்க முடியும். மேலும், ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் தனது பங்கை அதிகரித்து, இந்தியாவின் மிகப்பெரிய ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக உருவாகும் நோக்கில் LIC செயல்பட்டு வருகிறது.
LIC-யின் ஹெல்த் இன்சூரன்ஸ் துறை நுழைவு, இந்த துறையில் உள்ள போட்டியை அதிகரிக்கும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், பிரீமியம் விகிதங்களும் குறைய வாய்ப்புள்ளது.
LIC-யின் ஹெல்த் இன்சூரன்ஸ் துறை நுழைவு, இந்தியாவின் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும். இது, இந்திய மக்களுக்கு மலிவு விலையில் சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களைப் பெற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications