பொதுவாக பங்கு சந்தையில் பொது பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளார்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட மிக நல்ல வாய்ப்பிலும், முதலீட்டாளர்கள் சில பங்குகளுக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பர்.
அப்படி காத்திருக்கும் பங்குகளில் எல்ஐசி -யும் ஒன்று. இன்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வரும் எல்ஐசி, கடந்த சில காலாண்டுகளாகவே ஐபிஓவுக்கு தாக்கல் செய்யலாம் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
இது குறித்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுதரப்பில் எப்போது பங்கு சந்தைக்கு வரும் என்ற ஆவலும் இருந்து வருகின்றது.
எப்போது தாக்கல்
இது சர்வதேச அளவிலான மிகப்பெரிய முதலீடுகளை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் எல்ஐசி-யில் உயர் அதிகாரிகள் தரப்பில் ஜனவரி மூன்றாவது வாரத்தில் செபியிடம் ஐபிஓ-வுக்கு தாக்கல் செய்யப்பட்டலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஏற்கனவே பல முறை தகவல்கள் வெளியாகின. எனினும் இன்று வரையில் கொரோனா, அதனை தொடர்ந்து ஓமிக்ரான் என பல காரணிகளினால் தாக்கல் செய்யப்படவில்லை.
ஐபிஓ-வின் மதிப்பு
இந்த நிலையில் தான் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஐபிஓ மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இது நாட்டின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்சூரன்ஸ் துறையில் இன்றும் பெரிய ஜாம்பவானாக இருந்து வரும் எல்ஐசி, இன்சூரன்ஸ் போடாத ஒருவரிடம் சென்று கேட்டாலும் கூட எல்ஐசி தான் கூறுவார்கள். அந்தளவுக்கு மிகப்பெரிய, நம்பிக்கையான நிறுவனமாகவும் இருந்து வருகின்றது.
ட்ஜிட்டல் யுக்தி
எல்ஐசி-யில் லட்சக்கணக்கான ஏஜெண்டுகள் பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் பல லட்சம் பேரை நியமிக்கலாம்.
தோராயமாக டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின் படி, 67% இந்தியர்கள் , 15 வயது முதல் 64 வயதிலானவர்கள் ஆவர். சராசரி வயது 9 வயதாகும். இப்படி பலவேறு காரணங்களுக்கு மத்தியில் எல்ஐசியின் தேவை என்பது அதிகமாகவே இருந்து வருகின்றது. எனினும் எல்ஐசி தனது வணிகத்தினை மேம்படுத்த, இன்னும் டிஜிட்டல் யுக்தியை மேம்படுத்த வேண்டும். இது வருங்காலத்தில் அதன் வணிகத்தினை வளர்ச்சி காண கைகொடுக்கும் என்றும் கூறியுள்ளனர்.
தீபம் அறிக்கை என்ன கூறியது?
கடந்த ஆண்டு வெளியான தீபம் அறிக்கையிலும், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் எல் ஐ சி பொதுப் பங்கு வெளியீடு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதாவது நடப்பு ஆண்டின் ஜனவரி - மார்ச் 2022 காலாண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது கணிப்புகளும் அப்படியே வெளியாகி வருகின்றன. மொத்தத்தில் நடப்பு ஆண்டில் சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உண்டு எனலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications