டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வந்த நிலையில், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. இதன் காரணமாக எல்ஐசி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் மீது அரசியல் தரப்பினர், சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில் எல்ஐசி இதனை கருத்தில் கொண்டு எல்ஐசி அதன் கடன் மற்றும் பங்குகள் மீதான வரம்புகளில் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு விமர்சனங்கள்
இது எல்ஐசி நிறுவனம் அதன் முதலீடுகளின் மீது எடுக்கும் ரிஸ்கினை குறைக்கும் விதமாக, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது.
அதானி குழுமத்தில் எல்ஐசி-யின் முதலீடானது பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டாலும், தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் பல விமர்சனங்களை பெற்று வருகின்றது.
எல்ஐசி-யின் முதலீட்டு நிலை
தற்போது எல்ஐசி நிறுவனத்தின் முதலீடு என்பது நேர்மறையான பாதைக்கு திரும்பியிருந்தாலும், எல்ஐசி-யின் இந்த யூக கருத்தானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமானது அதானி குழும நிறுவனங்களின் கடன் மற்றும் ஈக்விட்டிகளில் 36,474.78 கோடி ரூபாய் முதலீட்டினை ஜனவரி 31, 2023 நிலவரப்படி வைத்திருந்தது.
எவ்வளவு முதலீடு?
எல்ஐசி வாங்கிய பங்குகளின் மொத்த மதிப்பு நிலவரம் 30,127 கோடி ரூபாயாகும். தற்போது இது முதலீட்டு நிலையில் இருந்து லாபத்தில் இருந்தாலும், எச்சரிக்கை நடவடிக்கையாக இது அமலுக்கு கொண்டு வரப்படலாம் என தெரிகின்றது. எனினும் எல்ஐசி-யின் இந்த முடிவால் உள்நாட்டு முதலீடுகள் என்பது கணிசமான குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் மற்ற பல நல்ல நிறுவனங்களிலும் முதலீடுகள் குறையலாம்.
உச்ச வரம்பு கொண்டு வரலாம்
எனினும் எல்ஐசி-யின் முதலீட்டு விகிதத்தில் அதானி குழுமத்தில் வெறும் 0.975% மட்டுமே இருந்தது. இது வெறும் 1% கீழாகவே இருந்து வருகின்றது. எனினும் இந்த தகவல்கள் எல்ஐசி தனது முதலீடுகளில் ஒரு உச்ச வரம்பினை கொண்டு வரலாம் என தெரிகிறது. இந்த உச்ச வரம்பானது எல்ஐசி இயக்குனர் குழுவானது ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், இது எல்ஐசி-யின் முதலீடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது எல்ஐசி-க்கும் லாபத்தில் சரிவினை காண வழிவகுக்கலாம்.
தனியார் நிறுவனங்களில் முதலீடு
தற்போது எல்ஐசி இன்சூரன்ஸ் நிறுவனம் தனிப்பட்ட தனியார் வணிக குழுமங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது. இது அதானி குழுமத்தினை தாண்டி, மற்ற பெரிய நிறுவனங்களில் பெரியளவில் முதலீட்டினை செய்துள்ளது. ஆக இதில் கட்டுப்பாடுகள் உச்ச வரம்புகள் என வரும்போது, தனியார் வணிக குழுமங்கள் முதலீடுகள், போதிய நிதி கிடைக்காமல் பாதிக்கப்படலாம்.
எல்ஐசி என்ன முடிவு எடுக்கப்போகிறது?
சந்தை ஆய்வாளர்கள் சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், முதலீட்டாளர்களின் நிதிக்கு பிரச்சனை வரலாம் என அஞ்சுகின்றனர். ஆக இத்தகைய முடிவுகள் என்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்பட்டாலும், எல்ஐசி குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மட்டுமே முதலீடு செய்யவில்லை. ஆக எல்ஐசி-யின் இந்த முடிவு எந்தளவுக்கு சாத்தியமான ஒன்றாக இருக்கும். இது சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications