அதானி குழுமத்தின் நிர்வாகத்துடன் எல்ஐசி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும், பாலிசிதாரர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஆபத்து இல்லை எனவும் எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்ஆர் குமார் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தில் எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்துள்ளன.
அதானி குழுமத்தில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஆரம்பத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சாமானியர்கள் முதலீட்டின் நிலை என்ன? என எதிர்கட்சிகளும் பரவலாக கேள்வி எழுப்பின.
அதானி குழும பங்குகள் சரிவு
அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த ஜனவரி 24ம் தேதி அன்று, அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டன. இது அதானி குழும முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது.
அதானி குழுமத்தில் முதலீடு
அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் 33,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளது. இதனால் எல்ஐசி பாலிசிதாரர்களின் பணம் ஆபத்தில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இப்பிரச்சனையால் எல்ஐசி பங்கு விலையும் கடுமையான சரிவினைக் கண்டது.
பேச்சு வார்த்தை நடத்தினார்கள்
அதானி குழுமத்தின் தலைமை நிர்வாகிகளுடன் எல்ஐசி தரப்பு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என ஏற்கனவே எல்ஐசி-யில் தலைவர் கூறியிருந்த நிலையில், தற்போது அந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பதாகவும் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து குமார் பேச்சு வார்த்தை என்பது நடந்துவிட்டது. இது சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
பயப்பட வேண்டாம்
அதேபோல பாலிசிதாரர்களும், முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது நாம் நினைக்கும் அளவுக்கு பெரிய பிரச்சனையும் இல்லை. இது கடலில் ஒரு துளி மட்டுமே என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதானி குழுமம் பெற்றுள்ள கடன், முதலீடுகள் குறித்தான அறிவிப்பானது வெளியான நிலையில், கடந்த வாரத்தில் இருந்து அதானி குழும பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
10 பங்குகள் பட்டியல்
அதானி குழுமத்தின் 10 பங்குகள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதானி குழும பங்குகள் கண்கானிப்பு பட்டியலில் இருந்தன. இதில் அதானி கிரீன் எனர்ஜி பங்கினில் 1.28%மும், அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனத்தில் இருந்து 9.14%மும் உள்ளது.
எவ்வளவு ஏற்றம்
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த வாரத்தில் 25.36% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த வெள்ளிக்கிழமை அமர்வில் மட்டும் அதானி குழும பங்குகள் 10% ஏற்றம் கண்டு, 684.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதெ அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை 5% அதிகரித்து, 562 ரூபாயாகவும் முடிவுற்றுள்ளது.
பாதிப்பு இல்லை
மொத்தத்தில் பாலிசிதாரர்களும், முதலீட்டாளர்களும் கவலைப்பட வேண்டாம் என எல்ஐசி கூறியிருப்பது, முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது எனலாம்.
குறிப்பாக முதலீட்டுதாரர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எல்ஐசி கூறியிருப்பது எல்ஐசி முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்ல, மற்ற அதானி குழும பங்கினில் முதலீடு செய்தவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications