இந்தியாவில் முதலீட்டுக்கு பல திட்டங்கள் இருப்பதால் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று முடிவெடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் எல்ஐசியை நம்பகின்றனர். இந்த கட்டுரையில் எல்ஐசியின் புதிய திட்டமான ஜீவன் சாந்தி பிளான் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மொத்தமாக ஒரு தொகையை செலுத்தி ஜீவன் சாந்தி பிளானை பெறலாம். சிங்கிள் பிரீமியம் செலுத்தி இந்த பாலிஸியை வாங்கலாம். பாலிஸி தொடக்கத்தில் ஆண்டுக்கணக்கில் சேரும் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளானில் தாமதமான மற்றும் உடனடியாக முதிர்ச்சி பெறும் வாய்ப்புகள் உள்ளன. எல்ஐசி இணையதளத்தில் உள்ளபடி இந்த திட்டம் முதிர்ச்சிக் காலத்துக்கான குறிப்பிட்ட தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது எல்ஐசி திட்டத்தில் இரண்டு முதிர்ச்சி திட்டங்கள் தரப்படுகின்றன.
- ஒரு ஆயுளுக்கான ஒத்திவைக்கப்பட்ட முதிர்ச்சி
- கூட்டு ஆயுளுக்கான ஒத்திவைக்கப்பட்ட முதிர்ச்சி
இந்த முதிர்ச்சி திட்டத்தை தேர்வு செய்தால் பின்னர் மாற்றங்களை செய்ய முடியாது.
30 வயதான அல்லது அதற்கு மூத்தவர்கள் யாரும் எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி பாலிஸியை வாங்கலாம். முதிர்ச்சிக்காலம் அதிகபட்சம் 79 வயது நிறைவு ஆகும்வரை. ரூ.15 லட்சம் குறைந்தபட்ச தொகை. பாலிஸி தொகை, முதிர்ச்சி காலம் ஆகியவற்றுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
ரூ.5 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக பாலிஸி பெற்றால் அதிகமான முதிர்ச்சி தொகையை பெறுவர் என்று எல்ஐசி கூறியுள்ளது. இன்சென்டிவ் அளிக்கப்படுவதால் இந்த பலன் கிடைக்கும். முதிர்ச்சி தொகையை மாதா மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர அடிப்படையில் பெறலாம். பாலிஸிதாரர்கள் முதிர்ச்சி பலனை தங்கள் விருப்பம் போல் தேர்வு செய்யலாம்.
12 ஆண்டுகள் கழித்து ஓய்வூதியதியத்தை இந்த திட்டத்தில் பெறலாம். ஒத்திவைக்கப்பட்ட முதிர்ச்சியின் படி ஓய்வூதியம் ஓராண்டு முதல் 12 ஆண்டுகள் கழித்து தரப்படும். சிங்கிள் பிரீமியம் பாலிஸிக்கும் ஓய்வூதியம் கிடைக்கும்.
புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின்படி 30 வயதில் ரூ.10 லட்சத்தக்கு 5 ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டால் ரூ.86,784 கிடைக்கும். 12 ஆண்டுகள் கழித்து ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,32,920 கிடைக்கும். 45 வயதில் ரூ.10 லட்சத்துக்கு பாலிஸி வாங்கியிருந்தால் 5 ஆண்டுகளுக்குப் பின் வருடாந்திர ஓய்வூதியம் ரூ.90,456 அளிக்கப்படும். 12 ஆண்டுகள் கழித்து ரூ.1,42,508 கிடைக்கும்.


Click it and Unblock the Notifications