இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) திங்கட்கிழமை, புதிய நிர்வாக இயக்குநராக ஆர் துரைசாமி அவர்களை நியமித்துள்ளது. இதற்கு மத்திய அரசு சார்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக எல்ஐசி இன்று பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆர் துரைசாமி தற்போது எல்ஐசி-யின் மும்பை மத்திய அலுவலகத்தில் செயல் இயக்குநராக உள்ளார். செப்டம்பர் 1, 2023 இப்பதவியில் செயல்பட துவங்கும் வேளையில், இதற்கு முன்பு இப்பதவியில் அதாவது எல்ஐசியின் நிர்வாக இயக்குநராக ஐப் மினி-க்கு (Ms. Ipe Mini) பதிலாக ஆர் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் இயக்குநர்களை தேர்வு செய்யும் நிதிச் சேவைகள் நிறுவனப் பணியகம் (FSIB) ஜூன் மாதம் துரைசாமியின் பெயரை எல்ஐசியின் நிர்வாக இயக்குநர் பதிவிக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையின் பெயரில் பல்வேறு ஆலோசனைக்கு பின்பு நியமிக்கப்பட்டு உள்ளார்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) முன்னாள் செயலாளரான பானு பிரதாப் சர்மாவின் தலைமையின் கீழ் FSIB அமைப்பு இயங்குகிறது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் எல்ஐசி நிறுவன பங்குகள் 0.84 சதவீதம் சரிந்து 655.50 ரூபாய்க்கு முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 661.45 ரூபாயாக்கும், குறைவாக 648.10 ரூபாய்க்கும் வர்த்தகமானது. மேலும் எல்ஐசி பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 0.02 சதவீதமும்ஸ, 3 மாதத்தில் 16.62 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications