நம் வாழ்க்கையில் எதிர்பாராத தருணங்களில் இன்சூரன்ஸ் பாலிசிகள் தான் நமக்கு கைகொடுக்கின்றன. அதிலும் மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் மக்களுக்கு இது நிறைவேறாக் கனவாகவே உள்ளது.
இவர்களையும் இன்சூரன்ஸ் போட வைக்கும் விதமாக ஜீவன் ஆனந்த் பாலிசி 815-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பாலிசியில் மிகப்பெரிய நன்மையே என்னவென்றால், பாலிசிதாரர்கள் அதற்கு செலுத்த வேண்டியதில்லை.
புதிய பாலிசி
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி, தனது வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக, அதற்கு ஏற்றவாறு திட்டங்களை தயாரித்து தருவதில் எல்ஐசிக்கு ஈடு இணை யாரும் இல்லை என்றே கூறலாம். அதிலும் அடித்தட்டு மக்களுக்கும் பயன்படும் வகையில் மிக மிக குறைவான முதலீட்டில் லாபம் ஈட்ட உதவும் பாலிசிகளில் ஒன்று தான் புதிய ஜீவன் ஆனந்த் பாலிசி 815 பாலிசியாகும்.
என்ன சலுகை
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் முக்கிய அம்சமே இந்த பாலிசி ஹோல்டர் இந்த திட்டத்திற்காக வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை என்பது தான். மேலும் பாலிசி முடிந்த பின்பும் கூட ரிஸ்க் கவர் செய்து கொள்ள முடியும் என்றால் பாருங்களேன். இந்த திட்டத்தின் பாலிசி ஹோல்டர் இறந்துவிட்டால் அவரின் நாமினிகள் இந்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
யார் யார் இந்த பாலிசியை பெற்றுக் கொள்ளலாம்?
இந்த பாலிசியை வாங்க குறைந்தபட்ச வயது எட்டாகும். அதிகபட்ச வயது 50 ஆகும். இந்த பாலிசி நிறைவடைய 15 முதல் 35 ஆண்டுகள் வரை ஆகும். இந்த பாலிசியை வாங்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலமாகவோ, அல்லது ஆஃப்லைன் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
எப்படி பிரிமியம் செலுத்த வேண்டும்?
இந்த பாலிசிக்கான பிரிமியத்தை வாடிக்கையாளர்கள் வருடாந்திர தவணையாகவும், அரையாண்டுக்கு ஒருமுறையும், காலாண்டுக்கு ஒரு முறையும், அல்லது விரும்பினால் மாதத்திற்கு ஒரு முறையும் கட்டிக் கொள்ளல்லாம். இந்த பாலிசியின் குறைந்த பட்சம் என்பது 1 லட்சம் ரூபாயாகும். மேக்ஸிமம் லிமிட் என எதுவும் இல்லை. இந்த பாலிசி 80சியின் மூலம் வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications