மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation (LIC), ஹெல்த் இன்சூரன்ஸ் துறைக்குள் நுழையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுள் காப்பீட்டுத் துறையில் முடிசூடா மன்னனாக இருக்கும் எல்ஐசி புதிய துறைக்குள் நுழைவது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கோவிட் தொற்று-க்கு பிறகு மக்கள் மத்தியில் ஹெல்த் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இருக்கிறது. இதேபோல் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் செயல்முறையிலும் பல மாற்றங்கள், பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த சாதகமான சூழ்நிலையில் எல்ஐசி தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் துறைக்குள் நுழைய, சந்தையில் இருக்கும் நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் மூலம் இத்துறையில் இறங்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக LIC தலைவர் சித்தார்த மோஹந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிடம் இருந்து காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கலப்பு காப்பீட்டு லைசென்ஸ் (composite insurance license) பெற்று ஹெல்த் இன்சூரன்ஸ் துறைக்குள் நுழையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Composite Insurance Licenses என்றால் என்ன?: தற்போது, இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்கள் லைப் இன்சூரனஸ் மற்றும் பொது காப்பீடு என தனித்தனி லைசென்ஸ் பெற்று இயங்குகின்றன. லைப் இன்சூரனஸ் நிறுவனங்கள் மருத்துவமனை செலவுகளுக்கான கூடுதல் காப்பீடு (critical illness cover) போன்ற சில விரிவாக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை மட்டுமே வழங்க முடியும்.
ஆனால், மருத்துவமனை சிகிச்சைக்கான செலவுகளுக்கான நேரடி (indemnity) காப்பீடு வழங்க அனுமதி இல்லை. காம்போசிட் இன்சூரன்ஸ் லைசென்ஸ் வழங்கப்பட்டால், லைப் இன்சூரனஸ் நிறுவனங்கள் இந்த வகையான காப்பீடுகளையும் வழங்க முடியும். இதற்காகக் காப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும், இதைப் புதிதாக அமைக்கப்படும் அரசு செய்யும் எனவும், ஏற்கனவே இதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
LIC-யின் இந்த முடிவு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?: இந்தியாவில் காப்பீடு துறை இன்னும் முழு வளர்ச்சியடையவில்லை. 2022-23 நிதியாண்டின் இறுதியில், சுமார் 2.3 கோடிக்கும் குறைவான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் 55 கோடி மக்கள் காப்பீடு பெற்றிருந்தாலும், அரசின் திட்டங்களின் மூலம் கிட்டத்தட்ட 30 கோடி மக்களும், குழு காப்பீடு திட்டங்கள் மூலம் சுமார் 20 கோடி மக்களும் காப்பீடு பெற்றுள்ளனர்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளின் விற்பனை அதிகரிப்பை அரசும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமும் (IRDAI) வலியுறுத்தி வரும் வேளையில் LIC-யின் இந்த முயற்சி காப்பீடு துறையில் வளர்ச்சியை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IRDAI தகவல்களின்படி, 2023 நிதியாண்டில், லைப் இன்சூரனஸ் நிறுவனங்கள் 2.9 லட்சத்திற்கும் குறைவான புதிய பாலிசிகளை மட்டுமே விற்பனை செய்துள்ளன. இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேர் காப்பீடு பெற்றுள்ளனர்.
ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் LIC களமிறங்கும் பட்சத்தில், சந்தையில் போட்டி அதிகரிக்கும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகள் கிடைக்கும். மேலும், போட்டி காரணமாக ப்ரீமியம் விலைகளும் குறைய அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications