LIC Aadhaar Shila plan என்பது தனித்துவமான சேமிப்புடன் நிறைய பலன்களைத் தரும் பாலிசி பேக்கேஜ். காலப்போக்கில் குடும்பத்துக்கு செல்வம் சேர்ந்து நிதி பாதுகாப்பை தருவதும் அவசரகாலத்தில் உதவக்கூடியதுமாகும்.
LIC Aadhaar Shila plan: இந்த பிளான் சேமிப்பு மற்றும் லைப் புரொடக்ஷன் தரும் ஒரு எண்டோவ்மென்ட் பிளான் ஆகும். பாலிசிக்காலத்தின் போது பாலிசிதாரர் மரணமடைந்தால் இந்தப் பிளான் மூலம் அவரது குடும்பத்துக்கு நிதிப்பாதுகாப்பு கிடைக்கும்.

பாலிசி காலம் முடியும் வரை பாலிசிதாரர் உயிரோடு இருந்தால் முதிர்ச்சிப் பலன்களை அவரது குடும்பத்தார் பெறலாம். கூடுதலாக அவர்களுக்கு கடனுதவி வசதியையும் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி விருப்பத்தையும் அளிக்கும். இது பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பிளான் ஆகும்.
தகுதி: 8 முதல் 55 வயதான எல்லா பெண்களும் இந்த பாலிசியை பெற விண்ணப்பிக்கத் தகுந்தவர்கள் ஆவர். பாலிசி 10-20 ஆண்டுகளில் முதிர்ச்சி பெறும். முதிர்ச்சி வயது 70 ஆண்டுகளாகும்.
ஆதார் ஷீலா பாலிசி கால்குலேட்டர் : எடுத்துக்காட்டாக நீங்கள் 15 வயது முதல் 25 வயது வரை தினமும் ரூ.87 டெபாசிட் செய்து வந்தால் ஓராண்டுக்கு ரூ.31,755 சேமிப்பாகும். இதேபோல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் செய்துவந்தால் உங்களது டெபாசிட் தொகை ரூ.3,17,550 ஆகும். இது 70ஆவது வயதில் முதிர்ச்சி அடையும். அப்போது உங்களுக்கு 11 லட்சம் தரப்படும்.
ஆதார் ஷீலா பாலிசி முதிர்ச்சி அடையும்போது அடிப்படைத் தொகையான ரூ.3 லட்சத்துடன் லாயல்டி அடிஷன் என்று ரூ.49,500 கிடைக்கும். துரதிர்ஷ்டவசமாக பாலிசிதாரர் 6ஆவது ஆண்டில் இறக்க நேரிட்டால் அவரது வாரிசுக்கு பாலிசி தொகையுடன் லாயல்டி அடிஷனாக ரூ.7,500 வழங்கப்படும்.
ஆதார் ஷீலா பிளானில் ஆட்டோ கவர் வசதி, பெண்களுக்கு மட்டுமானது, 5 ஆண்டுகள் கழித்து பாலிசிதாரர் இறக்க நேரிட்டால் பாலிசி தொகையுடன் கூடுதலாக லாயல்டி அடிஷன் தொகையும் வழங்கப்படும். இந்தப் பிளானில் கிரிட்டிகல் இல்னெஸ் வசதிகள் கிடையாது. கடன் வசதி உண்டு. ஆனால் 3 ஆண்டுகள் கழித்த பின்னரே வாங்க முடியும்.
எல்ஐசியின் விபத்து காப்பீடு மற்றும் நிரந்தரச் செயலிழப்புக்கான கூடுதல் ரைடர் வசதி உண்டு. காலாவதியான பாலிசியை முதல் அன்பெய்டு பிரீமியத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தப் பாலிசிக்குச் செலுத்தப்படும் பிரீமியம் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பாலிசி முதிர்ச்சி தொகை செக்ஷன் 10 டியின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த பாலிசிதாரர் மரணித்தால் செலுத்தாத பிரீமியத்தைக் கழித்துவிட்டு அடிப்படை பாலிசி தொகையுடன் அதன் வட்டியும் வழங்கப்படும்.
பாலிசி காலத்தின் 5 வருடங்களுக்குள் மரணம் சம்பவித்தால் அடிப்படைத் தொகையில் 110 சதவீதம் இழப்பீடாக வழங்கப்படும்.
5 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்தால் அடிப்படைத் தொகையில் 110 சதவீதத்துடன் லாயல்டி அடிஷன் தொகையும் வழங்கப்படும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications