நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி (LIC) மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு, மிகப்பெரிய முதலீட்டாளரும் கூட. இது இந்தியாவின் பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் உள்நாட்டு முதலீட்டாளராகவும் உள்ளது.
அந்த வகையில் எல்ஐசி முதலீடு செய்யும் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் பெற்ற பங்குகளாக உள்ளன.
எல்ஐசி வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் பங்குகளாக முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் எனலாம்.
NMDCல் 2% பங்கு விற்பனை
அந்த வகையில் அரசு பொதுத் துறையை சார்ந்த பொதுத்துறையை சேர்ந்த நிறுவனமான NMDCல் 2% பங்கினை விற்பனை செய்துள்ளது. இது மார்ச் 14 நிலவரப்படி, 11.69% ஆக மொத்த பங்கு விகிதம் என்பது இருந்ததாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது முன்னதாக 13.69% ஆக இருந்தது. இதன் சராசரி பங்கு விலை 119.37 ரூபாயாகவும் இருந்தது.
எவ்வளவு விற்பனை
எல்ஐசி இந்த பங்கு விற்பனை மூலம் 5.88 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 702 கோடி ரூபாயினை ஈட்டியுள்ளது.
என்.எம்.டி.சி என்பது இரும்பு தாது ஆய்வு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. என்.எம்.டி.சி-யில் மட்டும் அல்ல, TIL லிமிடெட் நிறுவனத்திலும் பங்குகளை விற்பனை செய்துள்ளது.
TIL-ல் எவ்வளவு பங்கு விற்பனை?
TIL லிமிடெட் நிறுவனத்தில் முன்னதாக 10.1% ஆக இருந்த பங்கு விகிதம், 8% ஆக குறைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 2.12 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளது. இது ஓபன் மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலை, 3 கோடி ரூபாய் எடுத்து சென்றுள்ளது.
மொத்த ஈக்விட்டி முதலீடு
TIL லிமிடெட் நிறுவனம் 10,22,985ல் இருந்து, 8,10,038 ஈக்விட்டி பங்குகளாக குறைந்துள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி உள்நாட்டில் மிகப்பெரிய முதலீட்டாளர்களும் உள்ளது. குறிப்பாக மொத்த கார்ப்பஸில் 25% ஈக்விட்டியில் உள்ளது. டிசம்பர் 2022 நிலவரப்படி, எல் ஐ சி-யில் 44.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை தனது போர்ட்போலியோவில் வைத்திருந்தது.
அதானி குழுமத்திலும் முதலீடு
எல் ஐ சி நிறுவனம் அதானி குழுமத்திலும் முதலீட்டினை செய்துள்ள நிலையில், இதில் ஆரம்பத்தில் பெரும் சரிவினைக் கண்டது. அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள எல்ஐசி, அதன் மதிப்பு 30,1287 கோடி ரூபாயாகவும் கூறியது. இதில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, ஏசிசி மற்றும் அம்புஜா உள்ளிட்ட பங்குகள் இதில் அடங்கும்.
பிரச்சனை இல்லை
எல் ஐசி-யில் தனது மொத்த முதலீட்டில் 1% குறைவான முதலீடாகவே இருந்தாலும், இது குறித்து பல்வேறு தரப்பினரும் பெரும் கவலையை எழுப்பினர். இதற்கிடையில் எல்ஐசி அதிகாரிகள் சில வாரங்களுக்கு முன்பு அதானி குழும அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கோரியிருந்தனர். அதோடு அதானி குழும பங்குகள் குறித்து கவலை ஏதும் இல்லை என கூறியுள்ளனர்.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications