அதானி குழுமத்தின் பொதுத்துறை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, மிகச்சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு, சிறந்த முதலீட்டாளர்களில் ஒன்றாகும்.
அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது குற்றம் சாட்டிய நிலையில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன.
இதன் காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது பாதிக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக அதானி குழுமத்தில் முதலீட்டாளர்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது.
அதானி குழும பங்குகள் ஏற்றம்
அப்படி இழப்பினை கண்டவர்களில் எல்ஐசி-யும் ஒன்று. தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டு வந்த நிலையில் தற்போது பற்பல காரணிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் மத்தியில் பங்கானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 4 அமர்வுகளில் மட்டும் அதானி குழும பங்குகள் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
எல்ஐசி முதலீடு
அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களில் இன்சூரன்ஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனங்களில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 1.28% பங்கினையும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் 9.14%மும், அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனம் கடந்த 1 மாதத்தில் 25.36% ஏற்றம் கண்டும் காணப்படுகின்றது.
இவ்வளவு ஏற்றமா?
கடந்த அமர்வில் மட்டும் அதானி போர்ட்ஸ் கிட்டத்தட்ட 10% ஏற்றம் கண்டு, 684.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலையானது 5% அதிகரித்து, 562 ரூபாயாக முடிவடைந்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் அறிக்கையினை அடுத்து அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டு வந்த நிலையில், கடந்த சில அமர்வுகளாக மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
எல்ஐசி முதலீடு எவ்வளவு?
எல்ஐசி கடந்த பிப்ரவரி மாதத்தில் 50,000 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்த நிலையில், தற்போது அது ஏற்றம் கண்டுள்ளது. இது டிசம்பர் 31, 2022 நிலவரப்படி 82,970 கோடி ரூபாயாக இருந்த மதிப்பு, 33,242 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. ஜனவரி 30 நிலவரப்படி கூட, அதானி குழுமத்தின் ஈக்விட்டி மற்றும் கடன் சந்தையில் 35,917.31 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக் காட்டின. இந்த மதிப்பு கடந்த ஜனவரி 27, 2023ல் 56,142 கோடி ரூபாயாக இருந்தது.
ஏற்றம் கண்டு வரும் பங்குகள்
இத்தகைய சூழலில் கடந்த சில அமர்வுகளாகவே அதானி குழுமத்தின் பங்கானது உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக அதானி குழுமத்தில் செய்த முதலீட்டின் மதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் எல்ஐசி-க்கு லாபம் கிடைக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரான GQG பார்ட்னர்ஸ் நிறுவனம் 15,400 கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்துள்ள நிலையில், அதானி குழும பங்குகள் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன.
2 மாதத்தில் முழு ரிப்போர்ட்
அதோடு அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, இரண்டு மாதத்தில் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆக இதுவும் விரைவில் அதானி குழுமத்தில் நிலவி வரும் குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications