எல்ஐசி-யின் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு 5 டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் (66.82 பில்லியன் டாலர்) என இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் எல்ஐசி-யின் வசம் இருக்கும், ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் ஆர்வம்
இந்த மதிப்பீடு குறித்து முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக அதன் எதிர்கால பணப்புழக்க அளவீடு மற்றும் காப்பீட்டாளர்களின் முக்கிய அளவீடு குறித்து காத்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் இந்திய மீடியாக்கள் இதன் மதிப்பினை 53 பில்லியன் டாலர் முதல் 150 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என கணித்துள்ளன.
முக்கிய பங்கு
எல் ஐ சி-யின் பங்கு வெளியீடானது அரசின் நிதி திரட்டல் இலக்கில் முக்கிய பங்கினை வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலக்கல் துறையின் செயலாளார் துஹின் காந்தா பாண்டே, உட்பொதிக்கப்பட்ட மதிப்பு 5 டிரில்லியன் ரூபாய்க்கும் மேலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஓ மதிப்பீடு?
இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாகவும், சந்தை பங்குல் முக்கிய பங்கினை கொண்டுள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கினை ஐபிஓ மூலம் விற்பனை செய்வதன் மூலம் 12 பில்லியன் டாலர் திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கிறது.
விரைவில் அறிவிப்பு
மேலும் துஹின் பாண்டே அடுத்த வாரத்தில் ஐபிஓ பற்றிய வரைவினை வெளியிடலாம் என கூறியுள்ளார்.
உண்மையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யாதவர்கள் கூட எல் ஐ சி பங்கு வெளியீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கும் ஐபிஓ பற்றி அதிகாராப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு
சமீப காலமாகவே பல நிறுவனங்களின் பொது பங்கு வெளியீடுகள் வெளியாகி வருகின்றன. எனினும் பங்கு சந்தைக்கு வரும் முன்னரே பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது எல் ஐ சி தான். இது சந்தையில் பெரும் வரவேற்பினை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications