அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஹிண்டர்ன்பர்க் அறிக்கை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த ஆய்வறிக்கை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.
எல்ஐசி, எஸ்பிஐ வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்தம் செய்யக் கூடாது. சாமானிய முதலீட்டாளர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
யாருக்கும் சாதகமாக இல்லை
இதற்கிடையில் இது குறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைலையிலான அரசு அதானி குழுமத்திற்கு சாதகமாக செயல்படவில்லை. மத்திய அரசால் கொண்டு வரப்படும் எல்லா திட்டங்களுமே, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் வெளிப்படையாகத் தான் கொண்டு வரப்படுகின்றன. பல்வேறு திட்டங்களும் வெளிப்படையாக டெண்டர் விடப்படுகின்றன.
இந்தியாவின் வளர்ச்சி
ஆக எந்த தனி நபருக்கும் சாதகமாக அரசு செயல்படவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சாதகமான ஒரு விஷயம் தான். எனினும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது வலுவாக காணப்படுகின்றது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார்.
ஏன் நிர்பந்தம்?
ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு மத்தியில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்ட நிலையில், அதில் எல்ஐசி உள்பட பல பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பலவும் முதலீடு செய்துள்ள சாமானிய மக்களின் முதலீடுகள் என்னவாகும். அரசு ஏன் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ய நிர்பந்திக்கிறது என்ற பல கேள்விகளையும் எழுப்பின.
சுதந்திரமாக முடிவு எடுக்கின்றன
இதற்கிடையில் தான் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களும், அவரவர்கள் சுதந்திரமாக முடிவினை எடுக்கிறனர். அரசு எதிலும் தலையிடுவதில்லை. எஸ்பிஐ மற்றும் எல்ஐசி தங்களது முதலீட்டு விகிதத்தினை பகிரங்கமாக அறிவித்துள்ளன. ஆக நாங்கள் சென்று அதில் முதலீடு செய்யுங்கள், இதில் செய்ய வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்காது. அவர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். அது அவர்களின் நிறுவன வாரியத்தால் இயக்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் குற்றச்சாடடு
அதானி குழுமத்தில் நிலவி வந்த சமீபத்திய ஏற்ற இறக்கத்தின் மத்தியில் சாமானிய மக்கள் முதலீடு செய்துள்ள, எல்ஐசி மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடுகளின் நிலை என்ன? இது மோசடி குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
எதிர்கட்சிகள் அமலி
இது குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிர்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற அவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அதானி குழுமம் நிலை குறித்தான விசாரணை நடத்தி உண்மை என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். அதானி குழுமத்தின் மீதான விவாதம் நடத்தப்பட வேண்டும். இது குறித்து பிரதமர் மோடி சரியான விளக்கம் கொடுக்க வேண்டும். அதன் பிறகே குடியரசு தலைவர் விவாதம் குறித்து விவாத்தில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications