லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நாட்டில் மிகபெரிய பொது பங்கு வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது சந்தைக்கு வரும் முன்பே இதன் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
குறிப்பாக பொதுப் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக வாய்ப்பு என்பார்கள்.
எல்ஐசி ஐபிஓ
இந்த நிலையில் எல்ஐசி இன்னும் சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் எல்ஐசி ஐபிஓ-வில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு கணிசமான பங்குகள் ஒதுக்கீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மொத்த விற்பனையில் சுமர் 25,000 கோடி ரூபாய் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லறை முதலீட்டாளார்கள் ஆர்வம்
இந்த எல்ஐசி ஐபிஓவில் சுமார் 7.5 - 10 மில்லியன் சில்லறை முதலீட்டாளார்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டலாம். இது இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய பங்கு வெளியீடாக இருக்கலாம்.
இந்த வெளியீட்டில் ஒரு தனி நபர் சரியாக 30,000 - 40,000 ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.
டீமேட்கள் அதிகரிப்பு
இந்தியாவில் 73.8 மில்லியன் டீமேட்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது எல்ஐசி ஐபிஓ விரைவில் வெளியாகலாம் என்ற நிலையில், தற்போது 80 மில்லியனாக டீமேட் கணக்கு அதிகரித்துள்ளது. இது மார்ச் மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வம்
இந்த பங்கு வெளியீட்டில் தனி நபர்கள் முதல் கொண்டு நிறுவனங்கள், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள், வங்கிகள் என பலரும் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த ஐபியோ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படலாம். இதில் பாலிஸ்தார்களுக்கும் சில சலுகைகள் இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது?
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் எல்ஐசி ஐபிஓ தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. எனினும் மார்ச் 11 அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போஅல் பங்கு விலையும் 2000 - 2100 ரூபாய் என்ற லெவலில் இருக்கலாம் என்றும் தெரிகிண்றது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications