எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் ஆக ஆரம்பித்தது முதல் லாபத்தில் இயங்கி வருகிறது.

ஆனால் சமீபத்தில் ஐபிஓ பட்டியலிட்ட பிறகு இதன் சொத்து மதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இது நிலையில் எல்ஐசியின் சொத்து மதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

முதிர்வு காலத்தில் ரூ.54 லட்சம்.. தினசரி ரூ.238 போதும்.. அசத்தலான எல்ஐசி-ன் ஜீவன் லாப்!முதிர்வு காலத்தில் ரூ.54 லட்சம்.. தினசரி ரூ.238 போதும்.. அசத்தலான எல்ஐசி-ன் ஜீவன் லாப்!

எல்.ஐ.சி சொத்து மதிப்பு

எல்.ஐ.சி சொத்து மதிப்பு

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) பங்கு விலை கடந்த வாரம் சரிந்ததை அடுத்து மார்ச் மாதத்திற்கான அதன் மதிப்பு (ஐஇவி) ரூ. 5.41 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மதிப்பு

கடந்த ஆண்டு மதிப்பு

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி ரூ. 5.39 டிரில்லியன் மற்றும் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியின்படி ஐஇவி மதிப்பு ரூ. 5,41,492 கோடி என எல்ஐசி தெரிவித்துள்ளது.

ஐஇவி மதிப்பு

ஐஇவி மதிப்பு

எல்ஐசியின் சமீபத்திய ஐஇவி மதிப்பைக் கணக்கிடும் போது அதிகரிக்கும் வட்டி விகிதம் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள் மற்றும் பிற நிலையான வருமான ஆவணங்களின் மதிப்பு வருவாயை பாதித்துள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும், பாலிசி விற்பனை வணிகம் வளர்ந்துள்ளது என்றும், இதனால் உட்பொதிக்கப்பட்ட நிகர வளர்ச்சி ரூ. 2,000 கோடியாக உள்ளது என்று எல்ஐசியின் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

உட்பொதிக்கப்பட்ட மதிப்பு

உட்பொதிக்கப்பட்ட மதிப்பு

உட்பொதிக்கப்பட்ட மதிப்பு (EV) என்பது ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த மதிப்பின் அளவீடு ஆகும். இது வணிகத்தில் உள்ள மொத்த அபாயங்களுக்கு போதுமான அளவு கொடுப்பனவுக்கு பிறகு வணிகத்திற்கு ஒதுக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து விநியோகிக்கப்படும் வருவாயில் பங்குதாரர்களின் நலன்களின் தற்போதைய மதிப்பை குறிக்கிறது.

எல்ஐசியின் நிர்வாக இயக்குநர்

எல்ஐசியின் நிர்வாக இயக்குநர்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாத இறுதியில், ஆறு மாத அடிப்படையில் ஐஇவி வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 30, 2021 நிலவரப்படி, எல்.ஐ.சியின் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு ரூ.5,39,686 கோடியாக உள்ளது என்றும் எல்ஐசியின் நிர்வாக இயக்குநர்ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 2021-22 நிதியாண்டின் போது எல்ஐசி சட்டத்தில் மாற்றங்களை தொடர்ந்து எல்ஐசியால் மேற்கொள்ளப்பட்ட நிதிப் பகிர்வு காரணமாக, செப்டம்பர் 30, 2021 இன் ஐஇவி மார்ச் 2021 இன் ஐஇவி-ஐ விட கணிசமாக அதிகமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி ஐபிஓ

எல்.ஐ.சி ஐபிஓ

எல்ஐசி ஐபிஓ விலையான ரூ.949ல் இருந்து சுமார் 25 சதவீதம் சரிந்துள்ளது. இருப்பினும், மோதிலால் ஓஸ்வாலின் பகுப்பாய்வாளர்கள், எல்.ஐ.சி பங்குகளில் 17 சதவிகிதம் ஏற்றம் விரைவில் சாத்தியம் என கூறுகின்றனர். அதன் சமீபத்திய குறிப்பில், எல்.ஐ.சி தனது தொழில்துறையில் முன்னணி நிலையைத் தக்கவைத்து கொள்வதற்கும், அதிக லாபம் தரும் தயாரிப்புப் பிரிவுகளில் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று கூறியுள்ளது.

பிரிமியம் தொகை

பிரிமியம் தொகை

மேலும் கடந்த நிதியாண்டில் தனிநபர்கள் மூலமான ரூ.35,572 கோடி பிரிமியம் கிடைத்துள்ளதாகவும், ரூ.14,818 கோடி குழு பிரிமியம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் எல்.ஐ.சி தெரிவித்துள்ளது. இதன்படி, ஆண்டு பிரிமியத்தில் தனிநபர்களின் பங்களிப்பு 70.59 சதவீதம் என்றும், குழு காப்பீடு பங்களிப்பு 29.41 சதவீதம் என்றும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC Shares Fall After Insurer Reports Embedded Value At Rs 5.41 Lakh Crores!

LIC Shares Fall After Insurer Reports Embedded Value At Rs 5.41 Lakh Crores! | எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு எத்தனை லட்சம் கோடி தெரியுமா?
Story first published: Monday, July 18, 2022, 12:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X