இந்திய முதலீட்டு சந்தையை புரட்டிப்போட்டு உள்ள ஹிண்டன்பர்க் சம்பவம் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் மக்களின் பணத்தை கையாளும் பல அரசு நிறுவனங்கள் அதானி குழுமத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வரப்படுகிறது என கூறப்பட்டு வந்தது மறக்க முடியாது. இதை உறுதி செய்யும் விதமாக இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான் எல்ஐசி மார்ச் காலாண்டில் அதானி குழுமம் நிறுவனங்களில் முதலீடு செய்து பங்கு இருப்பை அதிகரித்துள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா, அதானி குழுமத்தின் Flagship நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மார்ச் காலாண்டில் தனது பங்கு இருப்பை அதிகரித்துள்ளது. ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட பின்பும் நிஃப்டியில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு பாதியாக குறைந்தது.

இந்த நிலையிலும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா அதானி எண்டர்பிரைசஸ் பங்கு இருப்பு 4.23 சதவீதத்தில் இருந்து 4.26 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் காலாண்டில் எல்ஐசி, அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் சுமார் 3,57,500 பங்குகளை வாங்கியுள்ளது. இதன் வாயிலாக இந்நிறுவனத்தில் பங்கு இருப்பு அளவு 4.23 சதவீதத்தில் இருந்து 4.26 சதவீதமாக உயர்ந்துள்ளது. அப்போ பிற நிறுவனங்களில்..?
2022, டிசம்பர் 31 வரையிலான தரவுகள் படி எல்ஐசி நிறுவனம், அதானி குழுமத்தில் முதலீடு கைப்பற்றியுள்ள பங்கு இருப்பு.
அதானி போர்ட்ஸ் & SEZ - 9.14 சதவீதம்
அதானி எண்டர்பிரைசஸ் - 4.23 சதவீதம்
அதானி டிரான்ஸ்மிஷன் - 3.65 சதவீதம்
அதானி கிரீன் எனர்ஜி - 1.28 சதவீதம்
அதானி டோட்டல் கேஸ் - 5.96 சதவீதம்
அம்புஜா சிமெண்ட் - 6.33 சதவீதம்
ஏசிசி சிமெண்ட் - 6.41 சதவீதம்
மார்ச் 31 காலாண்டு முடிவில் எல்ஐசி நிறுவனம், அதானி குழுமத்தில் முதலீடு கைப்பற்றியுள்ள பங்கு இருப்பு.
அதானி போர்ட்ஸ் & SEZ - 9.12 சதவீதம்
அதானி எண்டர்பிரைசஸ் - 4.25 சதவீதம்
அதானி டிரான்ஸ்மிஷன் - 3.68 சதவீதம்
அதானி கிரீன் எனர்ஜி - 1.35 சதவீதம்
அதானி டோட்டல் கேஸ் - 6.02 சதவீதம்
அம்புஜா சிமெண்ட் - 6.29 சதவீதம்
ஏசிசி சிமெண்ட் - 6.41 சதவீதம்
ஜனவரி மாத இறுதியில் அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு 30,127 கோடி ரூபாய். மார்ச் காலாண்டில் சுமார் 4 அதானி நிறுவனத்தில் எல்ஐசி பங்கு இருப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதை வேளையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அதானி குழுமத்தில் அரசு நிறுவனங்களான எல்ஐசி, ஈபிஎப்ஓ ஆகியவற்றை மத்திய அரசு முதலீடு செய்ய கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டினார். எஸ்பிஐ வங்கியும் அதானி குழுமத்திற்கு அதிகப்படியான கடன்களை கொடுத்துள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக எல்ஐசி நிறுவனம், நீண்ட கால அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டு முதலீடு செய்கிறோம், மேலும் அதானி குரூப்-ல் எல்ஐசி நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் வெறும் 1 சதவீதம் மட்டுமே என விளக்கம் கொடுத்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications