முன்னணி காப்பீட்டு நிறுவனமாக விளங்கும் LIC டெக் டெர்ம் பிளான் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளான் முழுமையான ஆயுள் காப்பீட்டு திட்டத்தை தேடும் தனி நபர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளது. இதில் 2025-ஆம் ஆண்டில் பயனர்களுக்கு தேவைப்படுகிற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எதில் வேண்டுமானாலும் நீங்கள் இதை பெறலாம். இதில் நிகழ்வான பிரீமியம் விருப்பங்கள், பெண்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களுக்கு சிறப்பு சலுகைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி அனைத்து பாலிசிதாரர்களுக்கும் விபத்து ஏற்பட்டால் ரைடர் வசதியும் வழங்கப்படுகிறது.

தகுதி: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் 18 முதல் 65 வயதுடையவராக இருக்க வேண்டும். பாலிசியின் மொத்த காலம் 10 முதல் 40 ஆண்டுகள் வரை இருக்கும். எனவே 80 வயது வரை காப்பீட்டை பெரும் வசதி உள்ளது. மேலும் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.50 லட்சம் மற்றும் பிரீமியம் தொகையை ஆண்டுதோறும் அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்த முடியும்.
இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்?: காப்பீட்டைத் தேடும் சம்பளம் பெறும் நபர்கள், புகைபிடிக்காதவர்கள் மற்றும் குறைந்த பிரீமியம் விருப்பங்களைத் தேடும் பெண்கள், 18-65 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி அறிக்கைகள், சமீபத்திய புகைப்படம்
வருமானச் சான்று போன்றவை வ தேவைப்படும்.
எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ள இந்த டெக் டேர்ம் பாலிசியில் முதலீடு செய்வதற்கு முன்பு சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு: டெக் டேர்ம் திட்டம் குறைந்த பிரீமியத்தில் கணிசமான ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. செலவு குறைந்த அதே நேரத்தில் சிறந்த சலுகைகள் வழங்கப்படும் திட்டங்களில் இதுவும் ஒன்று. பாதுகாப்பான பாலிசியை தேடும் பாலிசிதாரர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பெண்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களுக்கு சிறப்பு பிரீமியம் விகிதங்கள்: எல்ஐசி நியூ டெக் டேர்ம் திட்டம் பெண்கள் மற்றும் புகை பிடிக்காத அனைவருக்கும் சிறப்பு பிரீமியம் விகிதங்களை வழங்குகிறது.
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை: எல்ஐசி நியூ டெக்-டெர்ம் திட்டம் ஆன்லைன் மூலம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பிரத்யேகமாக கிடைக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் காப்பீடு என்பது வெறும் முதலீடு என்று கருதக்கூடாது. அது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படும் போது இவை பாதுகாப்பாக இருக்கும். உதாரணமாக விபத்துகள், நோய்கள், இயற்கை சீற்றங்கள், துரதிஷ்டவசமான மரணம் போன்ற சம்பவங்கள் தனி நபர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய தருணங்களில் காப்பீட்டு திட்டங்கள் ஒரு பலமான துணையாக நின்று அமைதியான வாழ்க்கையை உறுதி செய்ய உதவும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications