கர்நாடகாவை சேர்ந்த டிலைட்ஃபுல் கோர்மெட் பிரைவேட் லிமிடெட், ஆன்லைனில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை விற்பனை செய்யும் லிசியஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறது. 2015ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் தற்போது சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீட்டு வாசலில் புதிய இறைச்சியை (குளிர்ந்த 0-4 டிகிரி இடையில்) வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் நாடு முழுவதுமாக 14 நகரங்களில் ஆன்லைன் இறைச்சி விற்பனை வணிகத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.

லிசியஸ் (டிலைட்ஃபுல் கோர்மெட் பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்தில் சர்வதேச முதலீட்டு நிறுவனமான டெமாசெக் ஹோல்டிங் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. லிசியஸ் நிறுவனம் 2026ம் ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களம் இறங்க திட்டமிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக லாபம் ஈட்டி காட்ட வேண்டும் என்று இந்நிறுவனம் மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்காக, டிலைட்ஃபுல் கோர்மெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வர்த்தக போட்டியாளர்களை எதிர்கொள்ள, மேலும் மேலும் கடைகளை திறந்து டெலிவரிகளை விரைவுப்படுத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான விவேக் குப்தா கூறியதாவது: இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் EBITDA அளவில் லாபத்தை ஈட்டுவதை நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்குள் புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாரான நிறுவனமாக மாற விரும்புகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லிசியஸ் நிறுவனம் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பீட்டில் நிறுவனம் பட்டியலிடப்பட வேண்டும் என்று நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது. இந்நிறுவனம் கடைசியாக 2023ம் ஆண்டில் நிதி திரட்டியபோது, இந்நிறுவனம் 150 கோடி டாலராக மதிப்பிடப்பட்டதாக தகவல்.
சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு பிறகு இரண்டாவது பெரிய ஐபிஓ சந்தை இந்தியா. 2024ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஒரு பொற்காலமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் நிறுவனங்கள் ஐபிஓ வாயிலாக 20 பில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டின. இந்தியாவின் ஐபிஓ சந்தையில் லிசியஸ் நிறுவனம் புதிதாக களம் இறங்க உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஐபிஓ நடைபெற வாய்ப்புள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications