இந்தியாவில் தற்போது உருவாகும் பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வகைப்படுத்தா துறையில் இருக்கும் வர்த்தகத்தை வகைப்படுத்தப்பட்ட வர்த்தகமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இப்படி கறிக்கடைகளுக்குப் போட்டியாக இணையதளம் வாயிலாக இறைச்சி விற்பனை செய்யும் நிறுவனமான லிஷியஸ் (Licious) தனது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் பெரும் நகரங்களில் ஆன்லைன் வர்த்தகம் வாயிலாக Licious சிறப்பான வாடிக்கையாளர் வட்டத்தைக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஆப்லைன் சந்தைக்கு வர முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் 20 முக்கிய நகரங்களில் 500 கடைகளைத் திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த 500 கடைகளை டெல்லி, என்.சி.ஆர், மும்பை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் மட்டும் சுமார் 75 சதவீத கடைகள் அமைக்கப்பட உள்ளது.
பெங்களூருவில் முதன்முதலில் கடைகள்: லிஷியஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான விவேக் குப்தா மற்றும் அபய் ஹஞ்சுரா ஆகியோர் இத்திட்டம் குறித்து கூறுகையில் முதல் ஐந்து கடைகள் அடுத்த 2-3 மாதங்களில் பெங்களூரில் திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.
"லிஷியஸ்" என்ற பெயரில் இயங்கும் இந்த கடைகள், தற்போதுள்ள இணையதள விற்பனையை மேம்படுத்துவதோடு புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையில் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆன்லைனிலிருந்து ஆஃப்லைனுக்கு மாறுவதன் காரணங்கள்: ஆன்லைன் விற்பனையை விட்டு, நேரடி கடைகளை திறப்பது லிஷியஸ் என்ற பெயரின் மதிப்பை மேம்படுத்தும் என்கிறார் விவேக் குப்தா. இதனை ஆன்லைன் பிராண்டுகளின் இயல்பான வளர்ச்சி பணி என்கிறார் அபய் ஹஞ்சுரா.
இந்த லிஷியஸ் கடைகள், பழைய இறைச்சிக் கடைகளைப் போல் இல்லாமல், மிகவும் நவீனமான அனுபவத்தை வழங்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி இறைச்சி துண்டுகளைத் தேர்ந்தெடுத்து, சீலிடப்பட்ட பாக்கெட்டில் பெற்றுக் கொள்ளலாம் என்று குப்தா கூறுகிறார்.
லிஷியஸ் நிறுவனம் இந்த கடைகளைச் சொந்தமாக நடத்தும், பெங்களூருவில், ரியல் எஸ்டேட் விலை நிலையை பொருத்து700-800 சதுர அடி பரப்பளவில் கடைகள் அமைக்கப்படும். தற்போது இயங்கும் ஆறு லிஷியஸ் கடைகள் இணையதள விற்பனையின் நீட்டிப்பாக செயல்படுகின்றன.
புதிய கடைகளில் ரெடி-டு-குக் மற்றும் ரெடி-டு-ஈட் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் கிடைக்கும். இதன் மூலம், சாதாரண இறைச்சி கடைகளை விட லிஷியஸ் நிறுவனம் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கும் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications