உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை நேரம் இல்லை, செய்யும் வேலை தொழில்களை விட்டுவிட்டு டூர் போக வேண்டும் என்றால் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் கஷ்டமான விஷயம். அதுவும் முக்கியமாக வார கணக்கில், மாத கணக்கில் செல்ல வேண்டும் என்றால் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இந்த நிலையில் உலகம் முழுவதும் சுற்றும் இதேவேளையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் கசக்குமா என்ன..? அப்படிப்பட்ட வாய்ப்பை தான் லைஃப் அட் சீ குரூயிசஸ் அறிவித்துள்ளது.
3 வருடத்தில் 135 நாடுகளுக்கு பயணம், சொகுசு கப்பலில் World Tour செல்லும் டக்கரான வாய்ப்பு. கட்டணம் எவ்வளவு தெரியுமா..?
லைஃப் அட் சீ குரூயிசஸ்
3 ஆண்டுகால சொகுசு கப்பல் பயணத்திற்கான முன்பதிவுகளை லைஃப் அட் சீ குரூயிசஸ் (Life at Sea Cruises) அறிவித்துவிட்டது. இந்த சொகுசு கப்பல் வாயிலாக ஏழு கண்டங்களை சேர்ந்த சுமார் 135-க்கும் அதிக நாடுகளை சுற்றிப்பார்க்க முடியும். இந்த சொகுசு கப்பல் ஒருவர் வாழவும், பணியாற்றவும், உலக நாடுகளை சுற்றி பார்ப்பது மட்டும் அல்லாமல் கடலிலேயே வீட்டை (home at sea) அமைத்து கொடுக்கிறது.
13 அதிசயங்கள்
இந்த சொகுசு கப்பல் உலகின் 14 அதிசயங்களில் 13 அதிசயங்களுக்கு நம்மை அழைத்து செல்கிறது. இதற்கான கட்டணம் ஒரு வருடத்திற்கு நபர் ஒருவருக்கு 29,999 டாலர்கள் துவங்கி அதிகபட்சம் 1,09,999 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கட்டணம்
இது இந்திய ரூபாய் மதிப்பில் 24,51,300 ரூபாய் விலையில் துவங்கி 89 லட்சத்து 88 ஆயிரத்து 320 ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு வருடம் முழுக்க கடலில் பயணித்து உலக நாடுகளை சுற்றிப்பார்க்க 24,51,300 ரூபாய் கட்டணம். இது வொர்த்தா என கமெண்ட் பண்ணுங்க.
எம்வி ஜெமினி கப்பல்
எம்வி ஜெமினி என்னும் கப்பல் தான் லைஃப் அட் சீ குரூயிசஸ் என்ற 3 வருடத்தில் 135 நாடுகளுக்கு பயண திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 400 கேபின்களை கொண்டுள்ளது. இவற்றில் மொத்தம் 1,074 பயணிகள் தங்க முடியும். இந்த சொகுசு கப்பல் நவம்பர் 1 ஆம் தேதி இஸ்தான்புலில் இருந்து பார்சிலோனா மற்றும் மியாமி வழியே பயணத்தை துவங்க இருப்பதாக தெரிகிறது.
வசதிகள்
இந்த 24 லட்சம் முதல் 90 லட்சம் ரூபாய் கட்டணத்தில் ஒருவருக்கு என்னவெல்லாம் கிடைக்கும். இந்த கட்டணத்தில் அனைத்து விதமான மதுபான, இரவு உணவுடன் மதுபானம், தலைசிறந்த வெல்னஸ் செண்டர், சன்டெக், நீச்சல் குளம், அதிவேக இண்டர்நெட், பொழுதுபோக்கு, புத்துணர்ச்சியூட்டும் கருத்தரங்குகள் மற்றும் உதவியாட்கள், 24 மணி நேர மருத்துவமனை சேவை, இலவச மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை அடங்கும்.
முக்கிய தேவை
தொழிலதிபர்கள் தங்களின் பணியை எவ்விதமான தடையும் இல்லாமல் சிறப்பாக மேற்கொள்ள அதிவேக இண்டர்நெட் கனெக்டிவிட்டி, தேவையான வசதிகள் மற்றும் இவை அனைத்தும் சீராக இருப்பது அவசியம் ஆகும்.
சிறப்பான இண்டர்நெட் கனெக்டிவிட்டி
இதை முழுமையாக பூர்த்தி செய்வது மட்டும் அல்லாமல் வேறு எந்த சொகுசு கப்பலும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துவிட முடியாத அளவிற்கு பணியாற்றுவதற்கான சேவைகளை வழங்குகிறது என்று லைஃப் அட் சீ குரூயிசஸ் நிர்வாக இயக்குனர் மைக்கல் பெட்டர்சன் தெரிவித்து இருக்கிறார்.
100 தீவுகள்
ஒவ்வொரு துறைமுகத்திலும், சொகுசு கப்பல் பல நாட்கள் நிறுத்திவைக்கப்படும். இதன் மூலம் பயணிகள் தங்கள் விருப்பம் போல் பயணம் செய்து புதிய இடங்களுக்கு சென்று அனுபவிக்கலாம். இந்த சொகுசு கப்பல் மொத்தம் 100 தீவுகளில் நிறுத்தப்பட உள்ளது.
தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா
இவற்றில் பெரும்பாலானவை கரீபியன் மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளை சேர்ந்தவை ஆகும். மேலும் இந்த கப்பல் தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகாவில் 98 நாட்கள் செலவழிக்க இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications