1932 டிசம்பர் 28 ஆம் தேதியன்று திராஜ்லால் ஹீராசந்த் அம்பானி பிறந்தார். ஆனால் திருபாய் அம்பானி என்றே எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். அவரது வாழ்க்கையில் எண்ணற்ற ஏழைகளை பெரும் பணக்காரர்களாக ஆக்குவதற்கான வழிகாட்டியாக இருந்தார்.
தனது கடினமான உழைப்பால் திருபாய் அம்பானி அமைத்த அடித்தளம் இன்றைக்கு மிகப் பெரிய தொழில் நிறுவனம் உருவெடுத்ததன் காரணமாக அம்பானி குடும்பத்தார் மீதான மதிப்பும் மரியாதையும் அம்பானி குடும்பத்தாருக்கு கிடைத்து வருகிறது.

உலகின் தொழில் துறையை அவரது நிறுவனம் இன்றைக்கு ஆட்டிப்படைக்கும் அளவுக்கு உள்ளது. இதற்கு முதன்முதற் காரணம் இந்த மாபெரும் மனிதரின் சிறந்த தொலைநோக்கும் அயராத உழைப்பும். அவரது வாழ்க்கை பற்றி நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் குரு என்ற படத்தில் நடித்தனர்.
இது திருபாய் அம்பானியின் வாழ்க்கையைத் தழுவிய திரைப்படமாகும். ஆனால் அவரைப் பற்றி மிக நன்றாக அறிந்து வைத்திருந்தது அவரது மனைவி கோகிலா பென். திருபாய் அம்பானியும் கோகிலா பென்னும் சிறந்ததொரு தம்பதியராக விளங்கினர்.
ஜாம்நகரைச் சேர்ந்த அந்த எளிமையான பெண்மணி தனது கணவரின் வாழ்க்கை முழுவதும் முக்கியமான பங்கை ஆற்றினார். அம்பானியின் வெற்றிப்பயணத்துக்கு உறுதுணையாக இருந்தார். திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன்கள் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் மோதிக்கொண்ட போது ஒரு தாயாக தனது கடமையை சிறப்பாகச் செய்தார்.
திருபாய் அம்பானி, கோகிலா பென் ஆகியோரின் பெயர்கள் நினைவுக்கு வரும்போதெல்லாம் அவர்கள் தங்களுக்கென ஒரு தொழிலை நிறுவி தொழில்முறையில் சிறப்பாக கட்டமைத்த விஷயம்தான் வெளியே தெரியும்.
ஊடகங்களில் இருந்து கோகிலா பென் எப்போதுமே விலகியே இருந்தார். பொதுவெளியில் வருவதை அவர் தவிர்த்து விட்டார். ஆனால் மிக அரிதாக அவர் தந்த ஒரு பேட்டியில் ஜாம்நகரில் திருபாய் அம்பானியுடனான திருமண வாழ்க்கையில் எளிமையாக வாழ்வது பற்றிய முக்கியத்துவத்தை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜாம்நகரில் தனது இளமைக்காலம் ஒரு நடுத்தரக் குடும்பச்சூழலில் கழிந்தது என்றும். வீட்டுவேலைகளையெல்லாம் நானே எடுத்துப் போட்டு செய்வேன். அந்தக் காலம் மறக்க முடியாதது என்றும் கூறினார். இத்துடன் தையல், எம்பிராய்டரி வேலைகளை செய்வேன். வீட்டுவேலைகளில் பெண்கள் அத்துபடியாக இருக்க வேண்டும் என்று எனது மூதாதையர் கூறுவர் என்றார்.
1955இல் திருபாய் அம்பானியை திருமணம் செய்து கொண்ட பின்னர் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. மும்பையை முதன்முறையாகப் பார்த்தேன்.
யெமன் நகருக்கு ஸ்டீமர் கப்பலில் சென்ற அனுபவமும் முதல் தடவையாகும்.
ஜாம்நகரை ஒப்பிடும்போது யெமனில் வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது. ஆனால் எனக்கு திருபாய் அம்பானி தோள் கொடுத்தார். சொல்லப்போனால் யெமன் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அங்கிருக்கும்போது தான் முகேஷ் பிறந்தார். அனில், தீப்தி, நினா ஆகியோர் மும்பையில் பிறந்தனர்.
நான்குபேருமே மும்பையில் திருமணம் செய்து கொண்டனர்.
இன்றைக்கு எனது குடும்பத்தில் இரண்டு மருமகள்கள், இரண்டு மருமகன்கள், ஒன்பது பேரப்பிள்ளைகள் உள்பட மொத்தம் 19 பேர் உள்ளனர் என்று மலரும் நினைவுகளைக் கூறினார்.


Click it and Unblock the Notifications