போர்ப்ஸ், ப்ளூம்பெர்க், ஹூரன் என எந்தப் பில்லியனர்கள் பட்டியல் எடுத்தும் இந்தியாவில் இருந்து முகேஷ் அம்பானி, கௌதம் அதானி எனப் பலர் வந்தாலும், டாப் 100 பில்லியனர்கள் பட்டியலில் டாடா குழுமத்தின் ரத்தன் டாடா மட்டும் வருவது இல்லை ஏன் தெரியுமா..?
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் மிகவும் பிரபலமான தொழிலதிபராக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா, டிசம்பர் 28ஆம் தேதி தனது 85வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.

இந்திய மக்கள் மத்தியில் அதிகம் மதிக்கப்படும் ஒரு தொழிலதிபர்களில் மிகவும் முக்கியமானவர் ரத்தன் டாடா, ட்விட்டரில் 11.8 மில்லியன் பாலவோர்களையும், இன்ஸ்டாகிராம்-ல் 9 மில்லியன் பாலோவர்களையும் வைத்துள்ளார். இவருடைய ஒவ்வொரு பதிவுக்கும் லைக், ஷேர் எனப் பிச்சிக்கிட்டுப் போகிறது.
இந்த நிலையில் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஓரே கேள்வி டாடா குழுமத்தில் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் 20க்கும் அதிகமான நாடுகளில் வர்த்தகம், பல தசாப்ச வர்த்தக வரலாறு கொண்டு குழுமத்தை கட்டியாளும் ரத்தன் டாடா மட்டும் ஏன் உலகப் பில்லியனர்கள் பட்டியலில் 100 இடத்திற்குள் கூட வர முடியவில்லை. என்பது தான்.
ஐஐஎப்எல் வெல்த் ஹூரன் ரிச் லிஸ்ட் 2022 அறிக்கையின் பட, ரத்தன் டாடா-வின் வணிகச் சாதனைகள் மற்றும் மக்கள் நலனில் அக்கறை ஆகியவற்றைப் போற்றப்பட்டாலும், நாட்டின் பணக்காரர்களின் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடா 3,800 கோடி ரூபாய் நிகரச் சொத்து மதிப்புடன் ஹூரன் 2022 பில்லியனர்கள் பட்டியலில் 421 வது இடத்தைப் பிடித்திருந்தார்,2021 ஆம் ஆண்டின் 433வது இடத்திலிருந்து 3,500 கோடி ரூபாய் சொத்தில் இருந்து கணிசமான முன்னேற்றம் அடைந்தார்.
ரத்தன் டாடாவின் செல்வத்தின் பெரும்பகுதி டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. மேலும் டாடா நிறுவனங்களின் மொத்த லாபத்தில் சுமார் 66 சதவீதத்தை டாடா சன்ஸ் மூலம் நிர்வகிக்கப்படும் டாடா டிரஸ்ட்கள் மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
டாடா சன்ஸ் நிறுவனம் தான் ஒட்டுமொத்த டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாகும். இந்த நிறுவனம் ரத்தன் டாடா மற்றும டாடா குடும்ப உறுப்பினர்கள் தலைமை வகிக்கும் டாடா டிரஸ்ட் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் டாடா சன்ஸ் பெரும் பல லட்சம் கோடி ரூபாய் வருமானத்தில் தனது செலவுகள், மறுமுதலீடுகள் போக லாபத்தை டாடா டிரஸ்ட்-க்கு மாற்றப்படும். அப்படி மாற்றப்படும் பணத்தை டாடா குடும்பம் கல்வி, ஆரோக்கியம், மக்கள் வாழ்வை மேம்படுத்தும் திட்டத்தில் பல தலைமுறைகளாகச் செலவிட்டு வரும் வேளையில், இப்போதும் இது தொடர்கிறது.
மேலும் ரத்தன் டாடா தனது சம்பளம், டாடா சன்ஸ் பங்குகள் வாயிலாக ஈட்டிய வருமானத்தைத் தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் வாயிலாகப் பல ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார். இதன் வாயிலாக ஈட்டியது தான் இந்த 3800 கோடி ரூபாய்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications