அமெரிக்க அரசாங்கம் கடந்த சனிக்கிழமை அன்று வெனிசுலா நாட்டின் மீது திடீரென ராணுவ நடவடிக்கை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவருடைய மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட்டார். கடந்த வாரம் இந்த நாள் வெனிசுலாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கான அதிபராக இருந்து வந்த நிக்கோலஸ் மதுரோ, தற்போது அமெரிக்க சிறையில் கைதியாக தங்கி இருக்கிறார். மதுரோ கைது அரசியல் ரீதியாக ஒருபுறம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மற்ற விஷயங்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

கைது செய்யப்பட்ட போது மதுரோ அணிந்திருந்த ஆடை வைரலானது. அதே போல மதுரோவுக்கும் இந்தியாவின் சத்யசாய்பாபாவுக்கும் இடையிலான தொடர்பும் வைரலானது. நிக்கோலஸ் மதுரோ சாய் பாபாவின் தீவிர பக்தர்கள். கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலம் புட்டபருத்திக்கு நிக்கோலஸ் மதுரோ தன்னுடைய மனைவியுடன் வருகை தந்தார். அங்கே உள்ள பிரசாந்தி நிலையத்திற்கு சென்று சாய்பாபாவின் உரைகளை அவர்கள் கேட்ட புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டன.
சாய்பாவா மறைந்த போது வெனிசுலாவில் துக்க தினம் அனுசரிக்கப்பட்டது. நிக்கோலஸ் மதுரோவின் அதிபர் அலுவலகத்தில் சாவேஸ் போன்ற புரட்சித்தலைவர்களின் படங்களோடு சாய்பாபாவின் பெரிய படமும் வைக்கப்பட்டிருந்தது. வெனிசுலாவில் சாய்பாபாவின் போதனைகளை பரப்பும் கூட்டமைப்பு கூட செயல்படுகிறது.
2005ஆம் ஆண்டில் மதுரோ இந்தியா வந்து சாய்பாபாவை பார்த்து விட்டு சென்றார், பின்னர் 2013ஆம் ஆண்டில் வெனிசுலா அதிபரானார். தற்போது அமெரிக்க அரசு மதுரோவை சிறைபிடித்து விட்டது. வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவி ஏற்றுள்ளார். துணை அதிபராக இருந்த இவருக்கு தற்போது அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

டெல்சி ரோட்ரிக்ஸும் சத்ய சாய் பாபாவின் பக்தர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சத்ய சாய்பாபா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் யூட்யூப் பக்கத்திலும் பிரசாந்தி நிலையத்திற்கு டெல்சி ரோட்ரிக்ஸ் வருகை தந்து சாய்பாபாவின் சமாதி மற்றும் ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்த படங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதங்களில் இவர் ஆசிரமத்துக்கு வருகை தந்துள்ளார்.
ஏற்கனவே நிக்கோலஸ் மதுரோ சாய்பாபா நிலையத்திற்கு வந்து சென்ற பிறகு தான் அதிபரானார் இந்த நிலையில் டெல்சி ரோட்ரிக்ஸும் இங்கு வந்து சென்ற பிறகு அதிபராக மாறி இருப்பது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்படக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications