இந்திய வர்த்தக வரலாற்றில் பல தலைமுறைகளாக இருக்கும் பிர்லா குழுமம் தற்போது குமார் மங்களம் பிர்லா தலைமையில் இயங்கி வருகிறது. சமீபத்தில் இவரின் மகன் ஆர்யமான் பிர்லா மற்றும் மூத்த மகளான அனன்யா பிர்லா ஆகியோரும் நிறுவனத்தில் சேர்ந்த காரணத்தால் பல துறையில் வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியுள்ளது இக்குழுமம்.
அதித்யா பிர்லா குழுமம் சிமெண்ட் உற்பத்தி முதல் ஆடை விற்பனை வரையில் பல துறையில் இயங்கி வரும் வேளையில் பல பிராண்டுகள் இது பிர்லா குழுமத்தை சேர்ந்தது என தெரியாமலே வாங்கி வருகிறார்கள். இப்படி பலருக்கும் இது ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்தது என தெரியாத 10 லைப்ஸ்டைல் பிராண்டுகளை தான் இப்போது பார்க்கபோகிறோம்.

Yauatcha: இந்தியாவில் ஆடம்பர உணவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வரும் வேளையில் சீன உணவுகளை நேர்த்தியா தயாரித்து மிகவும் சிறப்பான முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவளிக்கும் ஆடம்பர ஹோட்டலாக உள்ளது Yauatcha. இது ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்தது தான்.
Linen Club: இந்தியாவில் சுமார் 60 வருடங்களாக இயங்கி வரும் கைத்தறி ஆடை பிராண்டான Linen Club ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமானது. கைத்தறி ஆடைகளை இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் விற்பனை செய்வதில் மிகவும் பிரபலமான நிறுவனமாக உள்ளது Linen Club.
Freshwrapp foils: உணவில் துவங்கி பல இடத்தில் பயன்படுத்தும் அலுமினியம் ஃபாயில் பிராண்டான Freshwrapp foil ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமானது. ஆதித்யா பிர்லா குழுமம் தனது ஹிண்டால்கோ இண்டஸ்டீஸ் கீழ் கிளை நிறுவனமாக இருக்கும் Novelis கீழ் தான் Freshwrapp foil இயங்கி வருகிறது.
Aditya Birla Fashion & Retail: இந்தியாவில் ஆடை விற்பனை பிரபலமான பிராண்டாக இருக்கும் பான்டலூன்ஸ் பேஷன்ஸ், மதுரா பேஷன் போன்றவையும் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமானது. ஆதித்யா பிர்லா பேஷன் கீழ் Jaypore, Tasva, Marigold Lane போன்ற பாரம்பரியமான ஆடை பிராண்டுகளும் உள்ளது.
இதேபோல் ஆடம்பர ஆடை பிராண்டுகளான Sabyasachi, House of Masaba, Shantnu & Nikhil, Tarun Tahiliani, ஆகிய பிராண்டுகளில் பெரும் தொகையை முதலீடு செய்து கூட்டணியில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இதை தொடர்ந்து அமெரிக்க பிராண்டான FOREVER 21-ன் ஒட்டுமொத்த இந்திய ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை உரிமத்தை ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமாக்கியுள்ளது, 1889 ஆம் ஆண்டு அயர்லாந்தில் உருவான Peter England 2000 ஆம் ஆண்டில் ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றியது.
இதேபோல் Allen Solly, Louis Philippe, Van Heusen ஆகியவையும் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமானது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications