டெல்லி: கூடுதல் வரிப் பிடித்தங்களை தவிர்ப்பதற்கு வரும் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஆதார் மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டுமே முக்கியமான அடையாள ஆவணங்கள்.
பல்வேறு முறைகேடுகளை தடுப்பதற்காக அனைத்து அரசு சேவைகளுமே ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளன. அந்த வகையில் வருமான வரி செலுத்துவதற்கான முக்கிய ஆவணமான பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் பான் – ஆதார் இணைப்புக்கான கெடு முடிவடைந்தது . அதன் பிறகு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு தாமத கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மேலும் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலற்றதாகிவிடும் என வருமானவரித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வருமான வரி செலுத்துவோர் வரும் 31ஆம் தேதிக்குள் தங்களுடைய பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என வருமானவரித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமான வரித்துறை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மே 31ஆம் தேதிக்குள் உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விடுங்கள். இல்லையெனில் நீங்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டி இருக்கும் என கூறியுள்ளது. இவ்வாறு இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
வருமானவரி தாக்கல் செய்வதற்கு ஜூன் 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில் ,மே 31ஆம் தேதிக்குள் உங்களது பான் எண்ணையும் ஆதாரையும் இணைத்து விடுங்கள் என வருமான வரி துறை சார்பில் பதிவிடப்பட்டுள்ளது.
பான் – ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் அதிக விகிதத்தில் வரி பிடித்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என வருமான வரித்துறை கூறியுள்ளது கடந்த ஏப்ரல் மாதம் வருமானவரித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் மே 31 ஆம் தேதிக்குள் பான் ஆதார் இணைப்பு முடிவடைந்தால் டிடிஎஸ்-க்கான குறுகிய கழிப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது ஆனால் தவறும் பட்சத்தில் டிடிஎஸ் இருமடங்காக பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உங்களது பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது மிக எளிதானது. இதற்காக https://www.incometax.gov.in/iec/foportal என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கே 'Quick Links’ என்பதை தேர்வு செய்து 'Link Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் PAN, Aadhaar எண் மற்றும் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என கண்காணித்து 'Link Aadhaar’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்து validate button கிளிக் செய்ய வேண்டும். ஆனால் இதற்காக நீங்கள் ரூ.1,000ஐ அபராதமாக செலுத்த வேண்டும்.
Story Written by: Devika
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications