நாம் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்துகிறோமோ, அதே போல வேலை சார்ந்த அனைத்திற்குமான ஒரு தளமாக லின்கிடுஇன் செயல்பட்டு வருகிறது.
இதில் நாம் தொழில் ரீதியாக நம்முடைய ப்ரொபைலை உருவாக்கி அப்டேட் செய்துவிட்டு. இதன் மூலம் நாம் மிகச் சிறந்த நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை பெற முடியும்.

லின்கிடுஇன் தளமானது தன்னுடைய பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு புதிதாக மூன்று விளையாட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. புதிர் வகையை சேர்ந்த இந்த மூன்று விளையாட்டுகள் மூலம் லின்கிடுஇன் பயனாளர்கள் அடிக்கடி தளத்திற்கு வருகை தருவார்கள், நீண்ட நேரம் இதனை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 1ஆம் தேதி முதல் இந்த மூன்று விளையாட்டுகளும் லின்கிடுஇன் தளத்தில் அனைவராலும் அணுகக் கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பின் பாயிண்ட் (Pin point ), குயின்(queen) மற்றும் கிராஸ் கிளைம்ப் (cross climb) என்ற பெயரில் இந்த விளையாட்டுகள் அறிமுகமாகியுள்ளன.
லின்கிடுஇன்-ஐ செல்போனில் பயன்படுத்துபவர்கள் மை நெட்வொர்க் என்ற பகுதிக்கு சென்றால் இந்த விளையாட்டுகளை அணுக முடியும். அதேபோல கணினியில் பயன்படுத்துபவர்கள் லின்கிடுஇன் நியூஸ் பக்கத்தில் சென்று இந்த விளையாட்டுகளை எளிதாக அணுகலாம்.
கடந்த 2022ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இணையதளமானது WORDLE என்ற வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிர் விளையாட்டை தனது தளத்தில் அறிமுகம் செய்தது. இதனை அடுத்து நியூயார்க் டைம்ஸ் தளத்திற்கு இந்த விளையாட்டினை விளையாடுவதற்காகவே ஏராளமானவர்கள் வருகை தர தொடங்கினர்.
இது அந்த தளத்தின் எங்கேஜ்மென்டை இன்னும் அதிகப்படுத்தியது. இதே பார்முலாவை பின்பற்றி தான் தற்போது லின்கிடுஇன் தளமும் புதிர்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று விளையாட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
அண்மையில் தான் நிறுவனத்தின் நியூஸ் குழுவானது விளையாட்டு துறை சார்ந்த பாலோ பாஸ்கோவை எடிட்டராக பணி அமர்த்தியது. இவரது முயற்சியின் காரணமாகவே இந்த புதிர் விளையாட்டுகள் லிங்குடினில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பயனாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை இந்த விளையாட்டினை விளையாடலாம் .மேலும் அவர்களது கனெக்ஷனில் இருக்கக்கூடியவர்கள் யாரேனும் இதனை விளையாடுகிறார்கள் என்பதை காண முடியும்.
பின் பாயிண்ட் என்பது ஐந்து வித்தியாசமான வார்த்தைகளை காட்டும் இந்த ஐந்து வார்த்தைகளும் பொதுவாக எந்த பிரிவுக்குள் வருகிறது என்பதை பயனாளர்கள் யூகிக்க வேண்டும்.
குயின் என்பது சுடோக்கு அடிப்படையிலான ஒரு லாஜிக் கேம். திரையில் காணப்படும் கிரிட்களில் கிரவுன்களை பயனாளர்கள் அந்தந்த இடத்தில் பொருத்த வேண்டும்.குறிப்பிட்ட நேரத்திற்குள் உரிய இடங்களில் இதனை பொறுத்து விட வேண்டும்.
அடுத்ததாக கிராஸ்கிளைப்ம் என்பது கிராஸ்வேர்ட் மற்றும் வேர்ட் லேடர் இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டாகும். இதன் மூலம் பயனாளர்கள் லின்கிடுஇன் ச தளத்தில் செலவிடும் நேரம் என்பது அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications