லிங்டின் பெங்களூரின் விரைவாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பெங்களூரில் கட்டப்பட்ட, பெங்களூரில் அமைந்து அதன் பிறகு இடம்பெயர்ந்த மற்றும் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் குவிக்-காமர்ஸ், ஃபின்டெக், சாஃப்ட்வேர் மற்றும் மொபிலிட்டி துறைகளில் உள்ள ஸ்டார்ட்அப்களைக் கொண்டுள்ளது.
பெங்களூரைத் தளமாகக் கொண்ட 10 விரைவாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்:
செப்டோ: 2021-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செப்டோ, ஒரு குவிக் காமர்ஸ் டெலிவரி தளமாகும். செப்டோ நிறுவனம் முதலில் மும்பையில் தொடங்கப்பட்டது. ஆனால் நிறுவனம் சமீபத்தில் தனது தளத்தை பெங்களூருக்கு மாற்றப் போவதாக அறிவித்தது. அவர்கள் பெங்களூரின் சர்ஜாப்பூரில் ஒரு பெரிய அலுவலக இடத்தை பெற்றுள்ளது. மேலும் அனைத்து பணியாளர்களும் கர்நாடகாவின் தலைநகருக்கு செல்ல வாய்ப்புள்ளது.

Cred: Cred 2018-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் அனைத்து பில்களின் கட்டணங்களையும் நிர்வகிப்பதால் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை எளிதாக்கியது. இது ஃபின்டெக் தொழில்துறையில் உள்ள அனைத்து முக்கிய வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது. சில அறிக்கைகளின்படி, கிரெட்-இன் மதிப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாக்கெட் FM: கண்டென்ட் ஸ்டார்ட்அப் நிறுவனமான பாக்கெட் FM, ரொமான்ஸ், டிராமா, திகில் போன்ற பிரிவுகளின் கீழ் 100,000-த்திற்கும் ஆடியோக்களை வெளியிடுகிறது. இது அனைத்து முக்கிய மொழிகளிலும் பாக்கெட் FM அப்ளிகேஷன்களிலும் வெளியிடப்படுகிறது, மற்றும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் ஆடியோக்களைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.
ஸ்பிரிண்டோ: ஸ்பிரிண்டோ என்பது வளர்ந்து வரும் சாஃப்ட்வேர் நிறுவனமாகும். இது நிறுவனங்களுக்கான தனியுரிமை சட்டங்களை தானியக்கமாக்கும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம். பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பெங்களூரில் தலைமையிடமாக உள்ள ஸ்பிரிண்டோவின் சேவைகளைப் பெறுகின்றன.
ஜார்: ஜார் என்பது ஒரு ஃபின்டெக் நிறுவனம். இது பிக்கி பேங்க் கான்செப்டை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. உண்டியலில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இந்த ஜார் அப்ளிகேஷன் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். மேலும் தினசரி சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த அப்ளிகேஷன் செயல்படுகிறது. உடனடி கடன் வசதிகளையும் ஜார் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்டாக் க்ரோ: இந்தியாவில் நிதி அறிவை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும், ஸ்டாக் க்ரோ தனது பயனாளர்களை நிதி ரீதியான விஷயங்களைப் கற்பிக்க உதவுகிறது. இது நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நிதி பாடங்களை வழங்குகிறது.
ஸ்னிட்ச்: ஸ்னிட்ச் என்பது வேகமாக வளர்ந்து வரும் ஃபேஷன் பிராண்ட். இந்த நிறுவனம் ஏற்கனவே 25 இந்திய நகரங்களில் கடைகளைத் திறந்துள்ளது மற்றும் முக்கியமாக தனது ஸ்டைலான ஆடைகளுடன் டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களின் ஜென் Z கூட்டத்தை குறிவைத்து இயங்கி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications