உலகம் முழுவதும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சர்வதேச அளவில் பல நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதுமட்டும் அல்ல, புதிய பணியமர்த்தலையும் முடக்கியுள்ளன. இது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
ஏனெனில் சமீபத்திய வாரங்களாகவே டெக் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் செய்து வருகின்றன. இதற்கிடையில் இன்னும் என்ன நடவடிக்கை எல்லாம் எடுக்க காத்துக் கொண்டுள்ளனவோ? என்பது பெரும் கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகின்றது.
பணி நீக்கம் இல்லை
ஆனால் இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்திலும் லிங்கிடு இன் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஒரு ஆறுதலான அறிவிப்பினை கொடுத்துள்ளது. அது நிறுவனத்தில் பணி நீக்கம் என்பது இல்லை என்பது தான். இதனால் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் சந்தோஷமாக பணிபுரியலாம்.
பணியமர்த்தல் இல்லை
ஆனால் மறுபுறம் புதிய பணியமர்த்தல் என்பது தற்போதைக்கு இல்லை என்று அறிவித்துள்ளது. இது பிரெஷ்ஷர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் மிக கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் யாருக்கும் வேலை பறிபோகாது என்பதே பெரும் ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் அப்டேட்
கடந்த வாரம் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. ட்விட்டர் நிறுவனமும் அதன் 4400 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது 50% மேலாக அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
டெக் நிறுவனங்கள் பணி நீக்கம்
இது மட்டும் அல்ல டெக் ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனமும் மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது. இது சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் லிங்கிடு இன்னின் இந்த அறிவிப்பானது பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது.
லிங்கிடுஇன் அப்டேட்
எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்கிடு லின்-ன் தலைமை செயல் அதிகாரி, ரியான் ரோஸ்லான்ஸ்கி எந்த பணி நீக்கமும் செய்ய திட்டமிடவில்லை. எனினும் பணியமர்த்தலில் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியமர்த்தல் முடக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய நிலையை தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வழி நடத்தி செல்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பினை கண்டறியும் தளம்
பணி நீக்கங்கள் ஊழியர்களின் சொந்த பிரச்சனைகளுடன் லிங்கிடு இன் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட பலரும் தங்களுக்கான அடுத்த வாய்ப்பினை கண்டறிய லிங்கிடினை ஒரு தளமாக பார்க்கிறார்கள். ஊழியர்களை தங்களை இங்கு மேம்படுத்தி கொள்ளலாம். தங்களை தாங்களே மேம்படுத்திக் கொள்ள லிங்கிடினை பயன்படுத்தலாம்.
இந்தியாவில் லிங்கிடு இன்
இந்தியாவில் கடந்த ஆண்டினை காட்டிலும் நிறுவனத்தின் வருவாய் விகிதம் 50% அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 2022 காலாண்டில் லிங்கிட் இன் வருவாய் ஒரு வருடத்திற்கு முந்தைய காலகட்டத்தை விட 17% அதிகரித்துள்ளது. இந்தியாவில் 100 மில்லியன் பேர் பயனர்களை சேர்த்துள்ளது.
மொத்த உறுப்பினர்கள்
லிங்கிடு இன் இணையதளத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 875 மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் இந்தியா எங்களின் இரண்டாவது பெரிய சந்தையாகும். தொடர்ந்து நிறுவனம் உலகளாவிய விரிவாக்கம் செய்ய கவனம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications