லிங்கிடுஇன் தளம் தொழிற்துறை சார்ந்தவர்கள் மட்டுமே இருக்கும் இடம் என்பதால் ஒரு நிறுவனத்தின் சிறு பிரச்சனையில் இருந்து, வர்த்தகத் துறையைப் புரட்டிப்போடும் செய்திகள் குறித்தும் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது Notice Period குறித்த ஒரு பதிவு இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
Notice Period பதிவு
யஷ் தாக்கர் என்பவர் தனது லின்கிடுஇன் தளத்தில் அனைவருடைய Notice Period குறித்துக் கேட்டுள்ளார். இதனுடன் ஒரு ஊழியர் பணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் 90 நாட்கள் Notice Period அளிக்கும் அதே நிறுவனம் புதிதாகப் பணியில் சேரும் ஊழியரை ஒன்று அல்லது 2 வாரத்தில் சேரும் ஊழியரைத் தேடுகிறது என்ற புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
2 - 3 மாதம்
ஆனால் இந்தப் பதிவு சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டாலும் லின்கிடுஇன் தளத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பதிவுக்குப் பலர் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் 2 - 3 மாதம் வரையிலான Notice Period அளிப்பதை பெரும்பாலான ஊழியர்கள் வெறுப்பதாகக் கமெண்ட் செய்திருந்தனர்.
ஹெச்ஆர் பிரிவு அதிகாரி
மேலும் பல ஹெச்ஆர் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், எங்களுக்கு உடனடியாக அதாவது ஒரு வாரம் அல்லது 2 வாரத்தில் ஒரு ஊழியர் தேவையெனில் ஏற்கனவே நோட்டீஸ் பிரியட்-ல் இருக்கும் நபர்களைத் தேர்வு செய்வோம். ஆனால் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் 1 மாத Notice Period போதுமானது எனத் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் பாதிப்பு
இதேபோல் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நடுத்தர நிறுவனங்களுக்கு ஆட்கள் அதிகளவில் தேவை இருந்தாலும், அவர்களால் நோட்டீஸ் பீரியடுக்கான தொகையைக் கொடுத்து ஊழியர்களைப் பணியில் சேர்க்க முடியாத போக்கைக் கொண்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
1 மாதம் போதும்
ஆனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 1 மாத Notice Period என்ற முறையைக் கொண்டு வந்தால் அனைத்து தரப்பினருக்கும் ஏதுவாக இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க டெக் நிறுவனங்கள்
மேலும் சிலர் அமெரிக்காவில் பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் கூட ஒரு வார நோட்டீஸ் பீரியட் காலத்தைக் கொண்டு உள்ளது. இதுவும் இந்த நோட்டீஸ் காலத்தை நிர்வாகம் இல்லாமல் ஊழியர்கள் தீர்மானிக்கும் வசதியை கொண்டு உள்ளது எனக் கமெண்ட் செய்துள்ளனர். உங்க கருத்து என்ன..? எவ்வளவு காலம் நோட்டீஸ் பீரியட் வைக்க வேண்டும்..? பதிலை கமெண்ட் பண்ணுங்க..!!


Click it and Unblock the Notifications