இந்தியாவில் 82% ஊழியர்களின் மனநிலை இது தான்.. அதிர்ச்சியில் கார்ப்ரேட் நிறுவனங்கள்..!

இந்தியாவில் ஐந்தில் நான்கு ஊழியர்கள் இந்த ஆண்டில் புதிய வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை குறித்த ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி ஐந்தில் நான்கு ஊழியர்கள் அதாவது 82 சதவீதம் பேர் 2025 ஆம் ஆண்டு புதிய வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் மனிதவளத்துறை அதிகாரிகளில் 69 சதவீதம் பேர் தங்கள் நிறுவனங்களில் பொருத்தமான தகுதி கொண்ட ஆட்களை தேர்வு செய்வது மிகவும் சவாலாக இருக்கிறது என பதில் அளித்துள்ளனர்.

இந்தியாவில் 82% ஊழியர்களின் மனநிலை இது தான்.. அதிர்ச்சியில் கார்ப்ரேட் நிறுவனங்கள்..!

2024 ஆம் ஆண்டினை பொறுத்தவரை இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை மிகவும் மந்தமானதாகவே இருந்தது என லிங்குடின் அறிக்கை தெரிவிக்கிறது .இந்த நிலையில் தான் இந்த புதிய ஆண்டிலாவது தங்களுக்கு விருப்பமான வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும் என சுமார் 82 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர்.

58 சதவீதம் பேர் 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை முன்னேறும் என நம்புவதாக கூறியுள்ளனர். மேலும் 49 சதவீதம் பெயர் தாங்கள் அதிக நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பம் செய்வதாகவும் பெருமளவில் தங்களுக்கு பதில்கள் கிடைப்பதில்லை என்றும் கூறுகின்றனர். வேலைவாய்ப்பு தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களிடம் போதிய திறமை இருப்பதில்லை என மனித வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மனித வளத்துறை பிரிவில் செயல்படக்கூடிய அதிகாரிகள் இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் தற்போது பொருத்தமான திறன் கொண்ட ஊழியர்களை கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கிறது என கூறியுள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து ஐந்து மணி நேரங்கள் செலவிட்டு ஒவ்வொருவரின் விண்ணப்பத்தையும் ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர்.

தற்போது வேலைவாய்ப்பு சந்தை சவால் மிக்கதாக மாறி இருக்கிறது எனக் கூறும் லிங்குடின் தளத்தின் மூத்த மேலாண்மை மேலாளரான நிரஞ்சித்திர பானர்ஜி இந்தியாவில் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் தாங்கள் தேடும் வேலைக்கு ஏற்றபடி திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

பார்க்கும் நிறுவனங்களில் எல்லாம் வேலைக்கு விண்ணப்பம் செய்யாமல் நிறுவனத்தைப் பற்றியும் அவர்களின் தேவைகளை பற்றியும் முழுமையாக புரிந்து கொண்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை வாய்ப்பு கிடைக்கிறது என கூறுகிறார்.

இந்தியாவில் வேலை செய்யக்கூடியவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் புதிய துறையில் சென்று புதிய வேலை வாய்ப்பு பெறுவதற்கு தயாராக இருக்கிறோம் என கூறுகின்றனர். 39 சதவீதம் பேர் புதுப்புது திறன்களை கற்றுக்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக கூறுகின்றனர்.

இந்தியாவில் Aircraft Maintenance Engineer, Robotics Technician, Closing Manager ஆகிய மூன்று வேலைகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதாக லிங்குடின் அறிக்கை குறிப்பிடுகிறது.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+