தற்போது உருமாறிய கொரோனாவின் தாக்கம் என்பது சர்வதேச அளவில் பல நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், பல டெக் நிறுவனங்களும் ஊழியர்களை மீண்டும் வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன.
குறிப்பாக அமெரிக்காவில் தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், மீண்டும் கட்டுபாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
பல நிறுவனங்களும் தடுப்பூசி மற்றும் பேஸ் மாஸ்குகளை கட்டாயமாக்கியுள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் இன்னும் சில காலத்திற்கு வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன.
வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும்
இதற்கிடையில் லிங்க்ட்இன் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருவதாக கூறியுள்ளது. அலுவலகங்கள் படிப்படியாக திறக்கப்படுவதால், ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய ரீமோட் வொர்கிங் மூலம் அனுமதிக்கும் என்று, அதன் தலைமை மக்கள் அதிகாரி டூயிலா ஹான்சன் கூறியுள்ளார்.
நெகிழ்வு தன்மையை வழங்கும்
லிங்க்டுஇன்-னின் இந்த ரீமோட் ஓர்க்கிங் பாலிசியால் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது, அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவது என்ற நெகிழ்வு தன்மையை வழங்கும். இந்த முறையில் பணியாற்ற 16,000 ஊழியர்களுக்கு மேல் விண்ணப்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு முன்னர் இருந்ததை விட, அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இனியும் அதிகரிக்கலாம்
லிங்க்டுஇன்-னின் இந்த அறிவிப்பினால் ரீமோட் வொர்கிங் மூலம், பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற டெக் நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களும், ஊழியர்களை தடுப்பூசி போட்டுக் கொண்டு அலுவலகம் வர கூறி வருகின்றன. ஆனால் லிங்க்ட்இன் தற்போதைக்கு இது போன்ற எந்த அறிவிப்பினையும் கொடுக்கவில்லை.
சம்பளம் மாறலாம்
எனினும் லிங்க்ட்இன் ஊழியர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றினால், தங்களது இருப்பிடத்திற்கு ஏற்றவாறு சம்பளம் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவின் வருகைக்கு பிறகு அமெரிக்காவில் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்த நிறுவனங்களில் லிங்க்ட்இன்னும் ஒன்று. ஆனால் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்குமா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
ஆப்பிள் என்ன கூறியது?
இதே போன்று அக்டோபர் முதல் வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. அதே நேரம், ஆல்பாஃபெட்டின் கூகுள் நிறுவனம் 60% ஊழியர்களை அலுவகத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் லிங்க்ட்இன் நிறுவனம் கொரோனாவின் தாக்கத்திற்கு ஏற்ப, அலுவலகங்களை திறக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications