ஆதார் பான் இணைப்பு குறித்து அரசு பல காலமாக வலியுறுத்தி வருகின்றது. பல முறை கால அவகாசத்தினை கொடுத்துள்ளது. இணைக்காவிட்டால் அதற்கு அபராதம் என்றெல்லாம் கூட கூறி பார்த்து விட்டது. ஆனால் இன்று வரையிலும் கூட பலரும் இணைக்கவில்லை.
இதற்கிடையில் ஆதார் பான் இணைப்பு குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வேடிக்கையான பதிவினை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்க்கும்போது கட்டாயம் சிரிக்காமல் இருக்க முடியாது எனலாம். எனினும் மிக எளிதாக இணைத்து விடலாம்.
அனைவரையும் சிரிக்க வைத்த பதிவு
அதர்வா குப்தே என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள படம் தான் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. உண்மையில் இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே இணைத்துக் கொள்ளலாம். இந்த வகையில் இணைக்கும் போது யாருடைய உதவியும் உங்களுக்கு தேவைப்படாது.
லைக்குகளை அள்ளும் பதிவு
சொல்லப்போனால் உங்கள் வீட்டில் இருக்கும்பொருட்களை வைத்தே இணைத்துக் கொள்ளலாம். இது வெறும் காமொடி மட்டும் அல்ல, இப்படி கூட யோசிக்க முடியுமா எனும் அளவுக்கு உள்ளது. ஆகஸ்ட் 13, 2022ல் அதர்வா குப்தே பகிர்ந்த ட்வீட்டினை, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பலரும் கமண்ட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.
நகைச்சுவை உணர்வு
பலரும் இந்த ஈஸியான வழி குறித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் உங்களின் கற்பனை திறனுக்கு 100 மார்க்குகள் என்றும் கூறியுள்ளார். மற்றொரு பயனர் என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை என கூறியுள்ளார்.
இன்னொரு பயனர் மிக அருமையான பதிவு. என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை. உங்களின் நகைச்சுவை உணர்வை நான் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
மறுபுறத்தையும் இணைக்கணும்
இதனை மேலும் கலாய்க்கும் விதமான ஒரு பயனர் இது செல்லாது. நீங்கள் பானின் மறுபுறத்தையும் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எனினும் ஓருவர் நீங்கள் வரி செலுத்துபவர் மற்றும் நம் தேசத்திற்கு பங்களிப்பு செய்பவர். பான் கார்டு உங்களின் அடையாளம். தயவு செய்து அதற்கு மரியாதை கொடுங்கள் என அன்பான கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
கால அவகாசம்
ஆதார் பான் இணைப்புக்காக கடைசியாக ஜூன் 30, 2022 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைக்கப்படாவிட்டால் அபராதமாக 500 ரூபாயும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இது பின்னர் மார்ச் 31ம், 2023 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் இருக்கும் நிலையில், ஆதார் மையத்திற்கு சென்று இணைத்துவிடுங்கள்.
இப்படி இணைத்தால் அது செல்லாமல் போகலாம் பயனர்களே. .


Click it and Unblock the Notifications