இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான பைஜூ, இந்தியாவின் பல நகரங்களில் செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்நிறுவனம் தற்போது தனது கல்வி நிறுவனத்தை உலக அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் பைஜூ நிறுவனத்தின் உலகளாவிய விளம்பர தூதராக பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பைஜூ நிறுவனம்
அனைவருக்கும் கல்வி என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைஜூ நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் அதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மெஸ்ஸி
இந்த நிலையில் பைஜூ கல்வி நிறுவனமானது தற்போது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் தனது கல்வி கற்று கொடுத்தல் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி அவர்களை உலகளாவிய பிராண்ட் தூதராக நியமித்துள்ளதாக பைஜூ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக அளவில் சாதனை
தற்போது லீக் ஒன் கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனம் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதால் பைஜூ நிறுவனம் உலக அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 மில்லியன் இலக்கு
2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பைஜூ நிறுவனம் அனைவருக்கும் கல்வி என்ற முயற்சியை முன்னெடுத்தது. 2025ஆம் ஆண்டுக்குள் பத்து மில்லியன் குழந்தைகளுக்கு கல்வி கற்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
விளம்பர தூதர்
இது குறித்து பைஜூ நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் அவர்கள் கூறியபோது, 'எங்களின் உலகளாவிய தூதராக மெஸ்ஸி அவர்கள் இணைந்துள்ளதால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மெஸ்ஸி அவர்கள் அடிமட்டத்திலிருந்து உயர்ந்த வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். உலக அளவில் 5.5 மில்லியன் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்தல் என்ற இலக்கை வைத்துள்ள எங்களுக்கு உலகப்புகழ் பெற்ற மெஸ்ஸி உதவுவார் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அவரை விட வேறு யாரும் உலக அளவில் இந்த திட்டத்தை கொண்டு செல்வதற்கான சரியான நபர் இருக்கமாட்டார்' என்றும் தெரிவித்துள்ளார்.
கால்பந்து ரசிகர்கள்
மேலும் உலக அளவில் 3.5 பில்லியன் கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸி அவர்களுக்கு இருப்பதால் அவர் மூலம் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மெஸ்ஸியை சமூக ஊடகங்களில் 450 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்றும் எங்கள் நிறுவனத்தில் ஒரு போஸ்ட் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டால் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உயர்தர கல்வி
இதுகுறித்து லயோனல் மெஸ்ஸி அவர்கள் கூறியபோது, 'வாழ்க்கையை உண்மையில் மிகப் பெரிய அளவில் மாற்றுவது உயர் தரமான கல்வி மட்டுமே என்றும் பைஜூஸ் உலக அளவில் மில்லியன் கணக்கான மாணவர்களின் வாழ்க்கை பாதையை மாற்றி உள்ளது என்றும் கல்வி கற்கும் மாணவர்கள் உயர் நிலையை அடைய தொடர்ந்து சேவை செய்து வரும் பைஜூ நிறுவனத்திற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.
UNICEF நல்லெண்ண தூதர்
2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் மெஸ்ஸி UNICEF நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். மேலும் லியோனல் மெஸ்ஸி தனது சொந்த தொண்டு நிறுவனமான லியோ மெஸ்ஸி அறக்கட்டளையை 2007ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications