இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மதுபானம் விற்பனை மூலம் கிடைக்கும் வரி வருமானம் மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மதுபான விற்பனையை அதிகரிக்கவும், அதேவேளையில் மதுபான விற்பனை மூலம் அதிக வரி வருமானம் பெற வேண்டும் என்றும் மாநில அரசு முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு உள்ளது.
இந்நிலையில் மதுபானம் மற்றும் பீர் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், கர்நாடக அரசுக்கு அதிகப்படியான வரி வருமானம் கிடைத்துள்ளது.
மதுபானம் மற்றும் பீர் விற்பனை
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின்பு மக்கள் அதிகளவில் செலவு செய்த நிலையில், மதுபானம் மற்றும் பீர் விற்பனையும் அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மதுபான விற்பனை கடந்த ஆண்டை விடவும் சிறப்பாக இருந்த காரணத்தால் கர்நாடக மாநிலத்தில் கலால் வரி வசூல் உயர்ந்து கஜானா-வை நிரப்பியுள்ளது.
42.725 மில்லியன் பெட்டி
கர்நாடகாவில் 2021 ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் சுமார் 42.725 மில்லியன் பெட்டிகள் மதுபானமும், 15.6 மில்லியன் பீர் பாட்டில் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது 2020ஆம் ஆண்டுக் காலத்தை விடவும் 6.8 மில்லியன் மதுபான பெட்டிகளும், 2.8 பீர் பாட்டில் பெட்டிகளும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
கலால் வரி வசூல்
இதன் மூலம் 2020 வருடத்தின் மொத்த கலால் வரி வசூலில் கர்நாடக அரசு நிர்ணயம் செய்திருந்த 24,580 கோடி ரூபாய் வரி இலக்கில் 79 சதவீதத்தை இந்த 9 மாத காலகட்டத்தில் அடைந்துள்ளது. மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மதுபானம் மற்றும் பீர் விற்பனை குறைந்துள்ளது எனக் கலால் வரித் துறை தெரிவித்துள்ளது.
ஜூலை - செப்டம்பர் காலாண்டு
இந்த வருடம் மதுபானம் மற்றும் பீர் விற்பனை நாடு முழுவதும் சிறப்பாக இருந்த காரணத்தால் டிஸ்ட்டல்லர்ஸ், ப்ரீவர்ஸ், ரீடைல் விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினரும் சிறப்பான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளனர். 2021ஆம் ஆண்டில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் தான் அதிகளவில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications