சென்னை: இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, முதலில் உணவு மட்டுமே டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மளிகை பொருட்கள், பால், தயிர், மருந்து, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் ஹோம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
இந்த முக்கியமான காலகட்டத்தில் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்ய நீண்ட காலமாக பல முன்னணி குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. ஆனால் மத்திய அரசும், மாநில அரசுகளும் இதற்கு அனுமதி அளிக்காத காரணத்தால் இந்த சேவை கொண்டு வர முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரள போன்ற மாநிலங்களில் Swiggy, BigBasket, Zomato-வின் Blinkit போன்ற ஆன்லைன் டெலிவரி தளங்கள் மூலம் மதுபான விற்பனையைச் செய்யும் வகையில் புதிய சோதனைத் திட்டங்களை ஆய்வு செய்து வருகின்றன என இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக இந்த சோதனை திட்டத்தில் ஆரம்ப கட்டமாக பீர், வைன் போன்ற குறைந்த அளவு மது அடங்கிய மதுபானங்கள் மட்டும் ஆன்லைனில் விற்கப்படும். இதன் வெற்றி மற்றும் மத்திய - மாநில அரசின் ஒப்புதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படும்.
இதேவேளையில் மாநில அரசுகளும், ஆன்லைனில் மதுபான விற்பனை செய்வது குறித்து மதுபான நிறுவனங்கள் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களிடம் சாதக பாதகங்களைக் கேட்டு வருகின்றன. இந்த மதுபான டெலிவரி சேவை நாட்டின் பெருநகரங்களில் இருக்கும் மக்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சட்டிஸ்கர் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், தற்போது இந்த மாநிலங்களில் ஆன்லைன் விற்பனைக்குத் தடைசெய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் மகாராஷ்டிராவில் சில உள்ளூர் ஆன்லைன் தளங்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.
இந்தியாவில் தற்போது ஈகாமர்ஸ் மற்றும் குவிக் காமர்ஸ் துறை நிறுவனங்கள் ரீடைல் மதுபான கடைகளில் நேரடியாக மதுபானங்களைப் பெற்று, அதை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு ஹோம் டெலிவரி செய்யப்படும். இது ஈகாமர்ஸ் மற்றும் குவிக் காமர்ஸ் துறைக்கு லாபகரமானதாக இல்லை என்பதை இப்போதைய பிரச்சனை.
இதேபோல் இந்த கட்டமைப்பின் கீழ் மதுபான விற்பனையை ஆன்லைன் வாயிலாக பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாது, எனவே தான் இச்சேவை துறை முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகள் தான் இந்த சோதனை முறை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications