கோவா-வில் ரூ.100-க்கு விற்கப்படும் சரக்கு பெங்களூரில் 513 ரூபா.. அப்போ தமிழ்நாடு - புதுச்சேரி..?
90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரையில், இன்னும் ஏன் 50 வயதை கடந்த சில நண்பர்கள் கூட்டம் வரையில் பார்ட்டி செய்ய ஏற்ற இடமாக இருப்பது கோவா. கர்நாடகா, மகாராஷ்டடிரா மாநிலத்திற்கு நடுவில் இருக்கும் ஒரு குட்டி மாநிலம், ஆனால் விடுமுறை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நினைவுக்கு வருவது கோவா தான்.
கோவா பார்ட்டி டவுன் ஆக இருக்க முக்கிய காரணம், இம்மாநிலத்தில் மதுபானத்திற்கு மிகவும் குறைவான வரி, இதேபோல் கோவா முழுக்க கடல் என்பதால் கசினோ முதல் வாட்டர் ஸ்போர்ட் என 24 மணிநேரமும் பார்ட்டி செய்ய ஏற்ற இடமாக மாறியதால் மதுபானத்தின் விலை காலம் காலமாக குறைவாக இருக்கிறது.
இந்த நிலையில் சர்வதேச ஸ்பிரிட் மற்றும் வையின் அசோசியேஷன் ஆப் இந்தியா முக்கியமான ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மதுபான வரி மூலம் விலை எந்த அளவுக்கு உயர்கிறது என ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின் படி கோவா-வில் 100 ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானம், டெல்லியில் 134 ரூபாய், கர்நாடகா மாநிலத்தில் 513 ரூபாய் வரையில் உயர்கிறது. மதுபானத்திற்கு அதிகப்படியான வரி விதிக்கப்படும் காரணத்தால் கோவா-வில் இருந்து அதிகப்படியான மதுபானங்கள் கடத்தப்படுகிறது.
அப்படியானால் கோவா-வில் வரியே இல்லையா என்றால் இருக்கிறது, கோவா-வில் மதுபான உற்பத்தி விலையில் இருந்து 49 சதவீத வரி விதிக்கப்பட்டு அதன் பின்பு தான் ரீடைல் சந்தையில் விற்கப்படுகிறது. இதுவே கர்நாடகாவில் 83 சதவீதம், மகாராஷ்டிராவில் 71 சதவீதம். இதுவே இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம் என்றால் 150 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு அனைத்து மாநிலங்களிலும் ஒரே வரி என்றாலும் மதுபானம், பெட்ரோலியம் பொருட்கள், சொத்து வரி ஆகியவை இன்னும் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்கு வெளியில் தான் உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களின் வரி வருமானத்தை அதிகரித்த இந்த 3 பிரிவுகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அதிகப்படியான வரியை விதிக்கிறது.
கோவா-வில் மதுபானத்திற்கு 49 சதவீதமெனில் டெல்லியில் 62 சதவீதம், ஹியானாவில் 47 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 66 சதவீதம், ராஜஸ்தானில் 69 சதவீதம், மகாராஷ்டிராவில் 71 சதவீதம், தெலுங்கானாவில் 68 சதவீதம், கர்நாடகாவில் 83 சதவீதம். அப்போ தமிழ்நாட்டில் என்ன வரி..?
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தில் இருந்து வரும் மதுபானத்திற்கு 58 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ரீடைல் விற்பனைக்கு வரும் போது கூடுதலாக 14.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
இதேுபோல் புதுச்சேரி-யில் மதுபானத்தின் MRP விலையில் 20 சதவீதம் வரி, இதோடு கலால் வரியாக 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Share This Article
English summary
Liquor sold 100 rupees at goa, cost 513 in Bangalore - Check Tamilnadu - Puducherry
90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரையில், இன்னும் ஏன் 50வயதை கடந்த சில நண்பர்கள் கூட்டம் வரையில் பார்ட்டி செய்ய ஏற்ற இடமாக இருப்பது கோவா. கர்நாடாக, மகாராஷ்டடிரா மாநிலத்திற்கு நடுவில் இருக்கும் ஒரு குட்டி மாநிலம், ஆனால் விடுமுறை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நினைவுக்கு வருவது கோவா தான்.கோவா பார்ட்டி டவுன் ஆக இருக்க முக்கிய காரணம், இம்மாநிலத்தில் மதுபானத்திற்கு மிகவும் குறைவான வரி, இதேபோல் கோவா முழுக்க கடல் என்பதால் கசினோ முதல் வாட்டர் ஸ்போர்ட் என 24 மணிநேரமும் பார்ட்டி செய்ய ஏற்ற இடமாக மாறியதால் மதுபானத்திற்கு காலம் காலமாக குறைவாக இருக்கிறது.இந்த நிலையில் சர்வதேச ஸ்பிரிட் மற்றும் வையின் அசோசியேஷன் ஆப் இந்தியா செய்துள்ள முக்கியமான ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மதுபான வரி மூலம் விலை எந்த அளவுக்கு உயர்கிறது என ஆய்வு செய்துள்ளது.இந்த ஆய்வின் படி கோவா-வில் 100 ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானம், டெல்லியில் 134 ரூபாய், கர்நாடகா மாநிலத்தில் 513 ரூபாய் வரையில் உயர்கிறது. மதுபானத்திற்கு அதிகப்படியான வரி விதிக்கப்படும் காரணத்தால் கோவா-வில் இருந்து அதிகப்படியான மதுபானங்கள் கடத்தப்படுகிறது.அப்படினால் கோவா-வில் வரியே இல்லையா என்றால் இருக்கிறது, கோவா-வில் மதுபான உற்பத்தி விலையில் இருந்து 49 சதவீத வரி விதிக்கப்பட்டு அதன் பின்பு தான் ரீடைல் சந்தையில் விற்கப்படுகிறது. இதுவே கர்நாடகாவில் 83 சதவீதம், மகாராஷ்டிராவில் 71 சதவீதம். இதுவே இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம் என்றால் 150 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு அனைத்து மாநிலங்களிலும் ஓரே வரி என்றாலும் மதுபானம், பெட்ரோலியம் பொருட்கள், சொத்து வரி ஆகியவை இன்னும் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்கு வெளியில் தான் உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களின் வரி வருமானத்தை அதிகரித்த இந்த 3 பிரிவுகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அதிகப்படியான வரியை விதிக்கிறது.கோவா-வில் மதுபானத்திற்கு 49 சதவீதமெனில் டெல்லியில் 62 சதவீதம், ஹியானாவில் 47 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 66 சதவீதம், ராஜஸ்தானில் 69 சதவீதம், மகாராஷ்டிராவில் 71 சதவீதம், தெலுங்கானாவில் 68 சதவீதம், கர்நாடகாவில் 83 சதவீதம். அப்போ தமிழ்நாட்டில் என்ன வரி..?தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தில் இருந்து வரும் மதுபானத்திற்கு 58 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ரீடைல் விற்பனைக்கு வரும் போது கூடுதலாக 14.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.இதேுபோல் புதுச்சேரி-யில் மதுபானத்தின் MRP விலையில் 20 சதவீதம் வரி, இதோடு கலால் வரியாக 20 சதவீதம் வரி விதிககப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Story first published: Monday, September 25, 2023, 14:10 [IST]
Other articles published on
Sep 25, 2023