அம்பானி குடும்பத்தினர் தங்களுடைய ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போனவர்கள். அவர்கள் வீட்டில் ஏதேனும் ஒரு விசேஷம் என்றால் கண்டிப்பாக அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களும் அங்கே படை எடுப்பார்கள்.
அதுமட்டுமின்றி தங்கள் வீட்டு நிகழ்வை உலகமே திரும்பிப் பார்க்க வேண்டும் என எண்ணக்கூடிய அம்பானி குடும்பத்தினர் எப்பொழுதுமே ஒரு சர்வதேச நட்சத்திரத்தை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்த செய்வார்கள்.

ஐரோப்பாவில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் புகழ்பெற்ற அமெரிக்க பாடகிகள் நடத்திய இசை நிகழ்ச்சிகள் குறித்து தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக முகேஷ் அம்பானி குடும்பத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து திருமணங்களிலுமே இதே போல உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் மேடை ஏறி நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளனர்.
ஜான் லெஜண்ட்(John Legend): முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியின் திருமண நிகழ்ச்சியிலும் பல்வேறு சர்வதேச நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த வகையில் ஆகாஷ் அம்பானிக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் திருமணம் நடைபெற்ற போது உலகப் புகழ்பெற்ற பாடகரான ஜான் லெஜெண்ட் பங்கேற்று திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தினார். இதற்காக அவருக்கு 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டது
மரூன்5 (Maroon 5): Memories மற்றும் Sugar among others போன்ற பாடல்களுக்கு புகழ்பெற்ற குழுவினர் மரூன் 5. இவர்கள் ஆகாஷ் அம்பானியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை நடத்தினர். இதற்காக இவர்கள் 8 கோடி ரூபாயை கட்டணமாக வாங்கினர்.
தி செயின் ஸ்மோக்கர்ஸ் (The Chainsmokers ): ஆகாஷ் அம்பானி,ஸ்லோகா மேத்தாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் செயின் ஸ்மோக்கர்ஸ் குழுவினர் கலந்து கொண்டு திரில்லிங்கான ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினர். இதற்காக அவர்கள் 8 கோடி ரூபாயை கட்டணமாக பெற்றனர்.
கிறிஸ் மார்ட்டின்(Chris Martin): ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் புகழ்பெற்ற கோல்ட் பே சிங்கரான கிறிஸ் மார்ட்டின் கலந்துகொண்டு விருந்தினர்களுக்கு புத்துணர்வு ஊட்டினார். இதற்காக அவர் பெற்றுக்கொண்ட தொகை 8 கோடி ரூபாய்.
பீயான்ஸ் (Beyonce ): முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் தங்களுடைய மகள் ஈஷா அம்பானியின் திருமணத்தையும் மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தினர். ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமலின் திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரபல கலைஞர் பீயான்ஸ் பங்கேற்று இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதற்காக அவர் 33 கோடி ரூபாய் கட்டணமாக பெற்றார்.
ரிஹான்னா: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் முதல் கொண்டாட்டம் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது. பல்வேறு பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும் குவிந்திருந்த இந்த கொண்டாட்டத்தில் பாப் சென்சேஷன் என அறியப்படும் ரிஹான்னா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார் இதற்காக முதன்முறையாக ரிகானா இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார் இதற்கு அவருக்கு 74 கோடி கட்டணமாக செலுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.
கேடி பெர்ரி( Katy Perry): ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய இரண்டாவது கொண்டாட்டம் ஐரோப்பாவில் நடைபெற்றது. சொகுசு கப்பலில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்ச்சியில் 5 மணி நேர பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல பாப் பாடகி கேடி பேரி இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக 40 கோடிக்கும் அதிகமாக இவர் கட்டணம் பெற்றதாக தெரிகிறது.
பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் (The Backstreet Boys): ஐரோப்பாவில் நடைபெற்ற சொகுசு கப்பல் பார்ட்டியில் பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர் .இதற்காக அவர்களும் பல கோடி ரூபாயை கட்டணமாக பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications