இந்தியாவின் பெருமைக்குரிய கல்வி நிறுவனமாக பல ஆண்டுகளாக ஐஐடி கல்லூரிகள் இருந்து வருகிறது. நாட்டின் பல பிரபலமான அறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் இந்த கல்வி நிலையத்தில் இருந்து படித்து வந்துள்ளனர்.
சுந்தர் பிச்சை, நாராயண மூர்த்தி போன்ற பலர் ஐஐடியில் படித்தவர்கள். இதில் பலர் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர்.
அவர்களில் சிலர் பற்றி பார்க்கலாம்.

சுந்தர் பிச்சை, ஆல்பாபெட் இன்க்கின் தலைவர் மற்றும் சிஇஓ: தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை, தற்போது ஆல்பாபெட்டின் தலைவர் மற்றும் சிஇஓவாக உள்ளார். அதன் துணை நிறுவனமான கூகுள்-க்கும் அவர் தலைவராக உள்ளார்.
சென்னையில் உள்ள ஜவாஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி ஸ்கூல் மற்றும் ஐஐடியின் வன வாணி பள்ளியில் 12ஆம் வகுப்பை முடித்தார். பின்னர் ஐஐடி கரக்பூரில் மெட்டலர்ஜி இன்ஜினியரிங் படித்தார். இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்கில் எம்எஸ் படிப்பை முடித்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
சீபெல் ஸ்காலர் மற்றும் பால்மெர் ஸ்காலர் அந்தஸ்தைப் பெற்று இந்தியாவிலும் அயல்நாட்டிலும் மிகச் சிறந்த மேதையாக கருதப்பட்டார்.
சுந்தர் பிச்சை தனது தொழில் பயணத்தை மெக்கின்ஸி அண்டு கம்பெனியில் ஒரு இன்ஜினியர் மற்றும் புராடக்ட் மேனேஜராகவும் 2004இல் தொடங்கினார். பின்னர் அவர் கூகுளில் சேர்ந்தார்.
2019இல் அவர் ஆல்பாபெட் இன்கின் சிஇஓவாக ஆனார். அவரது சொத்து மதிப்பு இப்போது 1.31 பில்லியனாக உள்ளது.
புளூம்பெர்க் இதழின்படி சுந்தர் பிச்சையின் சம்பளம் 2022இல் 226 மில்லியன் டாலர்களாக இருந்தது.
என்.ஆர்.நாராயண மூர்த்தி, இன்போசிஸ்ஸின் இணை நிறுவனர்:
நாகவரா ராமாராவ் நாராயண மூர்த்தி இன்றைக்கு மிகப் பெரிய தொழில் அதிபர் ஆவார். இன்போசிஸ் நிறுவனத்தின் 7 இணை நிறுவனர்களுள் ஒருவர். கம்பெனியின் தலைவர், தலைமை எக்ஸிகியூட்டிவ் அதிகாரி, பிரசிடெண்ட், தலைமை மென்ட்டார் போன்ற பல்வேறு பதவிகளை நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் வகித்துள்ளார்.
தனது உயர் பள்ளிக் கல்வியை முடித்தபின்னர் 1967இல் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் டிகிரியை என்ஐடியில் முடித்தார். 1969இல் ஐஐடி கான்பூரில் மாஸ்டர் டிகிரியை முடித்தார். தனது தொழில் பயணத்தை ஐஐஎம் அகமதாபாத்தில் ஒரு ரிசர்ச்சராக தொடங்கினார்.
பின்னர் 1991இல் 6 பேருடன் சேர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார். அவரது மனைவி அளித்த ரூ.10,000 முதல் முதலீடாக பெற்றார். போர்ப்ஸ் கணிப்பின்படி நாராயண மூர்த்தியின் சொத்து மதிப்பு 4.3 பில்லியன் டாலர்களாகும்.
ஜெய் சௌத்ரி, ஜெஸ்கேலரின் சிஇஓ: ஐஐடி வாராணசியில் ஜெய் சௌத்ரி படித்து பட்டம் பெற்றார். கிளவுட் செக்யூரிட்டி பிஸினஸ் நிறுவனமான Zscaler-ன் சிஇஓவாக ஆனார். ஐடி-புவனேஸ்வரில் இன்ஜினியரிங் இளம்நிலை மற்றும் முதுநிலை பட்டங்களை பெற்றார். அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
செக்யூர் ஐடி, சைபர் டிரஸ்ட், ஏர்டிபன்ஸ், கேர்ஹார்பர் நிறுவனங்கள் ஆகியவை ஜெய் சௌத்ரியால் நிறுவப்பட்டவை ஆகும். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் பணக்கார ஐஐடி பட்டதாரியாக உள்ளார். போர்ப்ஸ் இதழின் உலக மகா 400 பட்டியலில் அமெரிக்காவின் 45ஆவது பணக்கார நபராக உள்ளார்.
சௌத்ரியின் நிகர சொத்து மதிப்பு 16.3 பில்லியன் டாலர்களாகும்.
பரத் தேசாய், சின்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர்: அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் பரத் தேசாய் சின்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். அவர் ஐஐடி பம்பாயில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிகிரி படித்தார். ஸ்டீபன் எம் ரோஸ் ஸ்கூல் ஆப் பிசினஸில் எம்பிஏ பட்டம் பெற்றார். ஐஐடி பட்டதாரிகளில் இவர்தான் மிகப் பெரிய பணக்காரர்.
கென்யாவில் பிறந்த பரத் தேசாய் இந்தியாவில் வளர்க்கப்பட்டு பின்னர் அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. 1976இல் அவர் டாடா குரூப்பில் ஒரு புரோகிராமராக வேலைக்கு சேர்ந்தார். பரத் தேசாயின் தற்போதைய சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.
சச்சின் பன்சால், பின்னி பன்சால், பிளிப்கார்ட்டின் நிறுவனர்கள்:
சச்சின் பன்சாலும் பின்னி பன்சாலும் ஐஐடி தில்லியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்கள். இருவரும் சேர்ந்து பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கினர்.
மிகப் பெரிய ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இப்போது பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
ஒரு ஆன்லைன் புக்ஸ்டோராக ஆரம்பிக்கப்பட்ட பிளிப்கார்ட் இன்றைக்கு மிகப் பெரிய இ-காமர்ஸ் தளமாக உருவெடுத்துள்ளது. சச்சின் பன்சாலின் நிகர சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர்கள் என்று போர்ப்ஸ் 2023இல் மதிப்பிட்டது.
2018இல் பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளுக்கு வால்மார்ட் 16 பில்லியன் டாலர்கள் கொடுத்தது. பின்னி பன்சால் நிகர சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.
விநோத் கோஸ்லா, சன் மைக்ரோசிஸ்டம்ஸ் இணை நிறுவனர் மற்றும் கோஸ்லா வென்சர்ஸின் நிறுவனர்: 1955இல் பிறந்த விநோத் கோஸ்லா ஒரு இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஆவார். சன் மைக்ரோசிஸ்டம்ஸின் இணை நிறுவனர் மற்றும் கோஸ்லா வென்சர்ஸின் நிறுவனர் ஆவார்.
நெட்வொர்க்கிங்கில் வென்சர் கேபிடல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலம் ஏராளமான சொத்துகளை குவித்தார். ஐஐடி தில்லியில் அவர் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். 1980இல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
எலக்ட்ரிகல் இன்ஜினியர்களுக்காக ஒரு எலக்ட்ரானிக் டிசைன் ஆட்டோமேஷன் பிசினஸ் புரொபசலை விநோத் கோஸ்லா தயாரித்தார்.
டெய்ஸி சிஸ்டம்ஸின் முதல் முழுநேர நிறுவனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றினார். 2004இல் அவர் கோஸ்லா வென்சர்ஸ் நிறுவனத்தை கலிபோர்னியாவில் தொடங்கினார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 6 பில்லியன் டாலர்களாகும்.
story written by: Jayachandran


Click it and Unblock the Notifications