1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக 1947 நவம்பர் மாதத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார் என்பதில் தொடங்கி தற்போது வரையிலான வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
ஆர்.கே.சண்முகம் செட்டி : சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் இவர். 1947 நவம்பர் 26இல் நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தான் திட்ட கமிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்தியாவின் வருவாய் 171.15 கோடி, செலவு 197.39 கோடி.

ஜான் மாத்தாய்: இவர் சுதந்திர இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சர். பின்னர் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றவர். இவர் தான் ஐந்தாண்டு திட்டங்களை அறிமுகம் செய்தவர். 1948 , 1950 ஆகிய ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
சி.டி.தேஷ்முக்: 1951-52ஆம் நிதியாண்டுக்கான முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1950 முதல் 1956 வரை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தார்.
டி.டி.கிருஷ்ணமாச்சாரி : இவர் தான் செல்வ வரி மற்றும் செலவின வரிகளை அறிமுகம் செய்தவர். இவர் காலத்தில் தான் என்.எல்.சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் நிறுவப்பட்டன. பின்னர் முந்த்ரா ஊழலில் இவர் பெயர் அடிப்பட்டதை அடுத்து பதவி விலகினார். 1956 முதல் 1958 வரை நிதி அமைச்சராக இருந்தவர்.
ஜவஹர்லால் நேரு: இந்தியாவின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பிரதமர் இவர். நேரு பரிசுபொருட்கள் வரியை அறிமுகம் செய்தார். 1956 ஆகஸ்ட்1 முதல் ஆகஸ்ட் 30 வரையிலும், 1958 பிப்ரவரி முதல் மார்ச் 22 வரையிலும் நிதி அமைச்சக பொறுப்பை வகித்தார்.
மொரார்ஜி தேசாய்: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர். ஒரு இடைக்கால பட்ஜெட் உட்பட 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இவர் 1958 மார்ச் முதல் 1963 ஆகஸ்ட் வரை இந்த பொறுப்பில் இருந்தார்.
டி.டி. கிருஷ்ணமாச்சாரி: 1963 ஆகஸ்டில் மொரார்ஜி தேசாயிடம் இருந்த நிதி அமைச்சகம் இவருக்கு வழங்கப்பட்டது. அப்போது முதல் 1965 டிசம்பர் 31 வரை இவர் நிதி அமைச்சராக இருந்தார்.
சச்சிந்திர சவுத்ரி: செலவின வரியை நீக்கியவர்,இவர் ஐநாவுக்கான இந்திய பிரதிநிதியாகவும் செயல்பட்டவர். 1966 முதல் 1967 வரை நிதி அமைச்சராக பணியாற்றினார்.
மொரார்ஜி தேசாய்: 1967 மார்ச் 13 முதல் 1969 ஜூலை 16 வரை நிதி அமைச்சர் பொறுப்பை வகித்தார். பிரதமர் இந்திரா காந்தி இவரிடம் ஆலோசிக்காமலேயே 14 வங்கிகளை அரசுடைமை ஆக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திரா காந்தி: பிரதமர் பதவியோடு நிதி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றார். 1969 ஜூலை மாதம் முதல் 1970 ஜூன் மாதம் வரை நிதி அமைச்சராக இருந்தார்.
யஷவந்த்ராவ் சவான்: காப்பீட்டு நிறுவனத்தை அரசுடைமை ஆக்கியவர். இவரது காலத்தில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. 1970 முதல் 1974 வரை நிதி அமைச்சராக இருந்தார்.
சிதம்பரம் சுப்பிரமணியம்: ESI, EPF போன்ற திட்டங்களை அறிமுகம் செய்தவர். 1974 அக்டோபர் முதல் 1977 மார்ச் வரை நிதி அமைச்சராக செயல்பட்டார்.
ஹரிபார் எம்.படேல்: காங்கிரஸ் அல்லாத முதல் நிதி அமைச்சர். இவர் தான் குறைந்த பட்ஜெட் உரையாற்றிய நிதி அமைச்சராக திகழ்கிறார். 800 வார்த்தைகள் மட்டுமே இவரது பட்ஜெட் உரை கொண்டிருந்தது. 1977 மார்ச் முதல் 1979 ஜனவரி வரை இந்த பொறுப்பில் இருந்தார்.
சரண் சிங்: 1979 ஜனவரி மாதம் தொடங்கி அதே ஆண்டின் ஜூலை மாதம் வரை நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
ஹேம்வதி நந்தன் பஹுகுனா: இவர் குறுகிய காலமே இந்த பொறுப்பில் இருந்தார். இவர் பட்ஜெட் எதையும் தாக்கல் செய்யவில்லை. 1979 ஜூலை முதல் அக்டோபர் வரை பதவி வகித்தார்.
ஆர்.வெங்கட்ராமன்: 1980 ஜனவரி முதல் 1982 ஜனவரி வரை நிதி அமைச்சராக இருந்தார்.
பிரணாப் முகர்ஜி: 1982 ஜனவரி முதல் 1984 டிசம்பர் வரையிலும் இந்த பொறுப்பை வகித்தவர். பொதுமக்களின் சேமிப்பு போக்கை மாற்றிய பெருமைக்குரியவர்.
வி.பி.சிங்: மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை அறிமுகம் செய்தவர் இவர். 1984 டிசம்பர் மாதம் முதல் 1987 ஜனவரி வரை இந்த பொறுப்பை வகித்தார்.
ராஜீவ் காந்தி: கார்ப்பரேட் வரி பின்னாளில் குறைந்தபட்ச மாற்று வரி என அறியப்பட்ட வரியை அறிமுகம் செய்தவர். 1987 ஜனவரி முதல் ஜூலை வரை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தார்.
என்.டி. திவாரி: 1987 ஜூலை முதல் 1988 ஜூன் மாதம் நிதி அமைச்சராக பொறுப்பில் இருந்தார்.
சங்கர்ராவ் சவான்: 1988ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 1989 டிசம்பர் வரை நிதி அமைச்சராக இருந்தவர். Equity-Linked Savings Scheme (ELSS) திட்டத்தை அறிமுகம் செய்தவர்.
மது தண்டாவதே: 1989 டிசம்பர் முதல் 1990 நவம்பர் வரை நிதி அமைச்சராக இருந்தார். இவர் காலத்தில் தான் செபி நிறுவப்பட்டது.
யஷ்வந்த் சின்ஹா: பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு அடித்தளமிட்டவர். 1990 நவம்பர் முதல் 1991 ஜூன் வரை இந்த பொறுப்பை வகித்தார்.
மன்மோகன் சிங்: இவர் LPG (Liberalisation, Privatisation and Globalisation) கொள்கையை கொண்டு வந்தார். 1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராக இருந்தார்.
ஜஸ்வந்த் சிங்: இந்தியாவில் குறுகிய காலம் நிதி அமைச்சராக இருந்தவர். 1996 மே 16 முதல் ஜூன் 1 வரை பதவியில் இருந்தார்.
ப.சிதம்பரம்: 1996ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் 1997 ஏப்ரல் 21 வரை நிதி அமைச்சராக இருந்தார்.
ஐ.கே.குஜரால்: 1997 ஏப்ரல் 21 முதல் மே 1 வரை நிதி அமைச்சக பொறுப்பில் இருந்தார்.
ப.சிதம்பரம்: 1997 மே 1முதல் 1998 வரை இந்த பதவியில் இருந்தார். இந்தியாவின் கனவு பட்ஜெட்டை தாக்கல் செய்து பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்டார்.
யஷ்வந்த் சின்ஹா: 1998 மார்ச் 19 முதல் 2002 வரை நிதி அமைச்சராக இருந்தார்.
ஜஸ்வந்த் சிங்: வருமான வரி தாக்கல் முறையில் மாற்றம் கொண்டு வந்தார். 2002 ஜூலை 1முதல் 2004 மே வரை பதவியில் இருந்தார்.
ப.சிதம்பரம்: 2004ஆம் ஆண்டு மே முதல் 2008ஆம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தார்.
மன்மோகன் சிங் : 2008 நவம்பர் முதல் 2009 ஜனவரி வரை பிரதமர் பதவியுடன் நிதி அமைச்சக பொறுப்பையும் வகித்தார்.
பிரணாப் முகர்ஜி: 2009 ஜனவரி முதல் 2012 ஜூன் வரை நிதி அமைச்சராக இருந்தார்.
ப.சிதம்பரம்: 2012 ஜூலை முதல் 2014 மே மாதம் வரை இவர் நிதி அமைச்சராக இருந்தார் பெண்களுக்கான முதல் வங்கியை அறிமுகம் செய்தார்.
அருண் ஜெட்லி: ஜிஎஸ்டி வரி அறிமுகம், 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. ரயில்வே பட்ஜெட் இணைப்பு பிப்ரவரி 1இல் பட்ஜெட் தாக்கல் ஆகியவற்றை கொண்டு வந்தார். 2014 முதல் 2019 மே வரை பதவியில் இருந்தார்.
பியூஷ் கோயல்: 2019 ஜனவரி முதல் பிப்ரவரி வரை இந்த பொறுப்பில் இருந்தார்.
நிர்மலா சீதாராமன்: இந்திரா காந்திக்கு அடுத்த நிதி அமைச்சக பொறுப்பை வகிக்கும் இரண்டாவது பெண். 2019ஆம் ஆண்டு ஜூலையில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019 முதல் 2024 வரை இந்த பதவியில் இருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications