நடிகர் விஜய்க்கு திரைப்படங்களைத் தவிர வரும் கூடுதல் வருமானம் என்ன?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவர்கள் 100 கோடி, 110 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற செய்திகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த சம்பளம் எல்லாம் நடிகர்களுக்கும் மார்க்கெட் உள்ள வரையில் மட்டுமே.

அதைப் புரிந்துகொண்ட சில நடிகர்கள் நடிகைகள் சம்பாதித்த பணத்தைத் திரும்பவும் சினிமா சார்ந்த தொழில்களிலும், சிலர் சினிமா அல்லாத பிற தொழில்களிலும் முதலீடு செய்வார்கள். அப்படி பிரபல தமிழ் நடிகர், நடிகைகள் செய்யும் சொந்த தொழில்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

விஜய்

விஜய்

 

தமிழ் சினிமாவில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர் என்றால் அது தளபதி விஜய். இவர் தான் நடித்து வரும் தளபதி 66 படத்துக்கு 110 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறுகின்றனர்.

இவ்வளவு சம்பளம் வாங்கும் விஜய், தனது அம்மா ஷோபா, மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சய் பெயரில் தனித்தனியாகத் திருமண மண்டபங்களை நடத்தி வருகிறார்.

 

சூர்யா

சூர்யா

 

நடிகர் சூர்யா அகரம் ஃபவுண்டேஷன் கீழ் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வி செலவுகளைச் செய்து வருகிறார். இவரது தொண்டு நிறுவனத்தின் கீழ் படித்த மாணவர்கள் இப்போது மருத்துவர்கள், இன்ஜினியர்கள், அரசு அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள்.

இவருக்குக் கோயம்புத்தூர் அருகில் சொந்தமாக ஒரு காற்றாலை இருப்பதாகக் கூறப்படுகிறது. திரைத்துறைக்கு வரும் முன்பு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் சூர்யா. இவருக்கு நீண்ட காலமாக ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது கனவு. அதை விரைவில் தொடங்க திட்டமிட்டு வருவதாகக் கூறுகின்றனர்.

 

நயன்தாரா

நயன்தாரா

நடிகை நயன்தாரா காஸ்மெடிக் ரீடெய்ல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் உலகின் பிராலமான லிப்ஸ்டிக் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் என்ற கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாய் வாலே ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஏஞ்சல் முதலீட்டாளராகவும் நயன்தாரா உள்ளார்.

அனிருத்

அனிருத்

கோலிவுட்டின் ராக் ஸ்டார் என இப்போது அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் அனிருத். ரஜினி, கமல் , விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இப்போது இவர் இசையமைத்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக 'தி சம்மர் ஹவுஸ் ஈட்டரி' என்ற ரெஸ்டாரண்ட் சென்னையில் உள்ளது.

தமன்னா

தமன்னா

நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும், சொந்தமாக White & Gold என்ற ஆன்லைன் ஜூவல்லரி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சமந்தா

சமந்தா

சமந்தா திரைத்துறையில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். மறுபக்கம் 'சாக்கி' என்ற பெயரில் ஆன்லைன் பேஷன் பிராண்ட் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரைத் திருமணம் செய்திருந்த நிலையில், இப்போது அவரது கணவருடன் இணைந்து வணிகத்தையும் கவனித்து வருகிறார் என கூறுகின்றன. மேலும் இவரும் மார்ஷல் ஜூவல்லரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அமலா பால்

அமலா பால்

நடிகை அமலா பால் கொச்சியில் சொந்தமாக ஒரு யோகா ஸ்டூடியோ நடத்தி வருகிறார். அங்கு அவர் செய்யும் யோகா வீடியோக்களை இவரது சமூக வலைத்தளங்களில் பார்க்கலாம்.

டாப்சி

டாப்சி

ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த டாப்சி, தனது சகோதரிகளுடன் சேர்ந்து வெட்டிங் ஃபேப் ட்ரீ என்ற பெயரில் ஒரு ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணிக்கு பெங்களூரு கோரமங்கலாவில் சொந்தமாக ஸ்மால்லிஸ் ரெஸ்டோ கேப் என்ற பெயரில் காபி ஷாப் ஒன்று உள்ளது.

ஆர்யா

ஆர்யா

நடிகர் ஆர்யா ஷீ ஷெல் என்ற பிரபலமான அரேபிய உணவகத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு தி ஷோ பீப்பள் என்ற சொந்த ப்ரோடக்சன் நிறுவனமும் உள்ளது.

ராம் சரண்

ராம் சரண்

மகதீரா, ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் ராம் சரண், ஹைதரபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ட்ரூ ஜெட் என்ற விமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பிரசாந்த்

பிரசாந்த்

நடிகர் பிரசாந்துக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் ஜாய் ஆலுகாஸ் என்ற பெயரில் நகை கடை உள்ளது.

சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன்

நடிகை சரண்யா பொன்வண்ணன் 25 வருடங்களாக டி-சாப்ட் என்ற பெயரில் பேஷன் டிசைன் பயிற்சிக் கூடத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார்.

ஜீவா

ஜீவா

நடிகர் ஜீவா சென்னை தி.நகரில் சொந்தமாக 1 எம்பி என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.

சூரி

சூரி

காமெடி நடிகர் சூரி, மதுரையில் அம்மன், அய்யன் என்ற பெயரில் இரண்டு சைவ மற்றும் அசைவ உணவகங்களை நடிகர் சூரி நடத்தி வருகிறார்,

 மகேஷ் பாபு

மகேஷ் பாபு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ஹம்பல் என்ற பெயரில் ஒரு பேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் ஆடைகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

பூர்ணிமா பாக்கியராஜ்

பூர்ணிமா பாக்கியராஜ்

நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் ஸ்ரீ என்ற பெயரில் ஒரு பொட்டிக் கடையை நுங்கம்பாக்கத்தில் நடத்தி வருகிறார்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

பாலிவு நடிகை சன்னி லியோன் ஸ்டார் ஸ்டக் என்ற பெயரில் சொந்தமாக ஒரு லிப்ஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதை தனது சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகளவில் விளம்பரப்படுத்தியும் வருகிறார்.

சிம்பு

சிம்பு

சிம்பு தற்போது நடிப்பிலிருந்து கிடைக்கும் பணம், பிக் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கிடைக்கும் பணம் ஆகியவற்றைச் சிறந்த முதலீடுகளில் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனது நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அவர் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. துபாயில் முதலில் பிஸ்னஸ் தொடங்க உள்ளதாகவும்,அ அதற்காகத் துபாய் சென்று வந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+