வாழ்க்கையில் புதிதாக ஒன்றை தொடங்குவதற்கு வயது ஒரு தடையே கிடையாது. இதற்கு உதாரணமாக பலர் வாழ்ந்துள்ளனர். 40 வயதுக்கு மேல் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில் என ஆர்வம் காட்டி உலகளவில் புகழ் பெற்றவர்கள் ஏராளம்.
அந்த வகையில் 40 வயதுக்கு மேல் புதிதாக ஒன்றை தொடங்கி அதன் மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஹென்ரி ஃபோர்டு : ஃபோர்டு வாகன நிறுவனத்தை நிறுவியர் ஹென்ரி ஃபோர்டு. தன்னுடைய 40ஆவது வயது வரை வாகன உற்பத்தி துறையில் பல கலைகளை கற்றுக் கொண்ட இவர். அதன் பின்னர் தான் ஃபோர்டு நிறுவனத்தை நிறுவினார். இவர் 1908ஆம் ஆண்டில் ஃபோர்டின் மாடல் டி காரை அறிமுகம் செய்தார். அது தான் அவரை கோடீஸ்வரர் ஆக்கியது.
ரே கிராக்: மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை 52ஆவது வயதில் வாங்கிய போது தான் இவர் கோடீஸ்வரர் ஆனார். விற்பனையாளராக பணியை தொடங்கிய இவர், 52ஆவது வயதில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை வாங்கி , அதனை உலகின் முன்னணி ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனமாக உருவாக்கினார்.
ஹேர்லேண்ட் சேண்டர்ஸ்: தன்னுடைய 62ஆவது வயதில் தான் இவர் முதன்முறையாக கேஎஃப்சி என்ற கடையை ஃபிரன்சைசியாக எடுத்தார். தொடர்ந்து 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து கேஎஃப்சி என்ற பிராண்டை உலகம் முழுவதும் கொண்டு சென்றார். தன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் இவர் உலக ஃபேமஸ் ஆனதோடு கோடீஸ்வரராகவும் மாறினார்.
ஜேம்ஸ் டைசன்: பிரிட்டனை சேர்ந்த பொறியாளரான இவர் பல புதுமையான ஐடியாக்களுடன் வலம் வந்தவர். ஆனால் எந்த நிறுவனமும் இவரது புதுமையான வேக்யூம் கிளினர் கருவியை ஏற்கவில்லை. 5 ஆண்டுகள் 5,000 வகையிலான வேக்யூம் கிளினர்களை உருவாக்கினார். ஆனால் பிரிட்டனில் அதற்கு வரவேற்பே கிடைக்கவில்லை. இதனால் பல லட்சம் நஷ்டமடைந்த அவருக்கு ஜப்பான் சந்தையில் அடித்தது ஜாக்பாட். ஜப்பானில் இவரது வேக்யூம் கிளினருக்கு வரவேற்பு கிடைத்து தற்போது டைசன் என்ற பிராண்டே உலகம் முழுவதும் நன்றாக விற்பனையாகிறது. 44ஆவது வயதில் தான் இவருக்கு வெற்றி வசப்பட்டது.
அர்மானி: ஃபேஷன் உலகில் இவரை அறியாதவரே இருக்க முடியாது. ஒரு கடையில் சாதாரணமாக வேலை பார்த்து வந்தவர். ஃபேஷன் உலகில் கால்பதிக்க தொடங்கினார். தன்னுடைய 41ஆவது வயதில் அர்மானி என்ற பிராண்டை உருவாக்கினார். தற்போது சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் 174ஆவது இடத்தில் இருக்கிறார்.
வாரன் பஃபெட்: உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் முதலீட்டாளர் இவர். தன்னுடைய 32ஆவது வயதில் தான் முதல் மில்லியனை இவரால் சம்பாதிக்க முடிந்தது. தன்னுடைய 55ஆவது வயதில் தான் பில்லினியராக இவர் மாற முடிந்தது.
சாம் வால்டன்: வால்மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் இவர். தன்னுடைய 20 கள் மற்றும் 30களில் ரீடெய்ல் மேலாண்மை பணிகளில் ஈடுபட்டு வந்தார். 44ஆவது வயதில் தான் வால்மார்ட் கடையை முதன்முறையாக நிறுவினார்.
ராதாகிஷன் தமானி: டிமார்ட் நிறுவனரான இவர் 48ஆவது வயதில் தான் பில்லினியர் என்ற அந்தஸ்தை பெற்றார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் ஸ்டாக் புரோக்கராக தான் பணியை தொடங்கினார். 1995இல் ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஐபிஓ-வில் அதிக எண்ணிக்கையிலான பங்கினை வாங்கி போட்டார்.அது அவருக்கு நல்ல வருவாயை ஈட்டி தந்தது. 2000ஆம் ஆண்டில் பங்குச்சந்தையை விடுத்து ரிடெய்ல் ஸ்டோரான டிமார்ட்டை தொடங்கினார்.
ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெறுவதற்கு வயது ஒரு தடை கிடையாது, சரியான தொழில் யோசனையும் அதனை முறையாக செயல்படுத்தும் உத்திகளுமே ஒருவரை தொழிலில் வெற்றி பெற செய்து கோடீஸ்வரர் ஆக்குகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications