எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான கண்ணோட்டம் தொடர்ந்து மாறி வரும் வேளையில் மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் பைக் மற்றும் எலக்ட்ரிக் கார் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்து தொடர்ந்து டிமாண்ட் அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் ஒரு முக்கியமான பிரச்சனை உள்ளது, எலக்ட்ரிக் பைக் மற்றும் எலக்ட்ரிக் கார் என எது எடுத்தாலும் பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் இதன் விலை அதிகமாகவே உள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் மலிவு விலையில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களின் விலையில் பெரும் பகுதி அதன் பேட்டரியை சார்ந்து இருக்கும் காரணத்தால், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் சரி, மக்களுக்கும் சரி இப்போது ஒகு குட் நியூஸ் வந்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி விலை கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததை தொடர்ந்து, இப்போது பேட்டரி விலை நீண்ட கால அடிப்படையில் சரிவை தழுவி வருகிறது. இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைந்து விற்பனையும் அதிகரிக்கும்.
ப்ளூம்பெர்க் NEF வருடாந்திர லித்தியம்-அயன் பேட்டரி விலை குறித்த கணக்கெடுப்பில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரி பேக் விலைகள் சராசரியாக இந்த ஆண்டு ஒரு கிலோவாட்-க்கு 139 டாலராக குறைந்துள்ளது, 2022 ஆம் ஆண்டில் இது 161 டாலராக இருந்தது. இதன் மூலம் கடந்த வருடத்தை காட்டிலும் பேட்டரி பேக் விலைகள் சுமார் 14% சரிந்துள்ளது.
லித்தியம்-அயன் பேட்டரி விலை குறித்து 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வரும் வேளையில் 2023 ஆம் ஆண்டில் பதிவான சரிவு மிகப்பெரிய சரிவாகும். இந்த திடீர் விலை சரிவுக்கு என்ன காரணம்..?
இதற்கு முன்பு லித்தியம் உலோகம் மிகவும் அரிதான உலோகமாக இருந்தது, இதனால் சந்தையில் டிமாண்ட் அதிகமாக இருப்பது சப்ளை குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 4 வருடத்தில் உலகில் பல நாடுகள் லித்தியம் உற்பத்தியை பெரிய அளவில் முடுக்கிவிட்டு இருக்கும் வேளையில் 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து சந்தையில் தேவைக்கு அதிகமாகவே லித்தியம் உலோகம் கிடைக்கிறது.
லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பில் முக்கிய உலோகமாக இருக்கும் லித்தியம் உலோகம் விலை குறையும் பட்சத்தில் இதன் விலை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதோடு பேட்டரி தயாரிப்புக்கு தேவையான பிற முக்கிய தயாரிப்புகளின் விலையும் தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் 14 சதவீத என்ற பெரும் சரிவு பதிவாகியுள்ளது.
மேலும் சீனாவின் பேட்டரி உற்பத்தி மட்டுமே சர்வதேச தேவையை தாண்டியுள்ளது, இதனால் சர்வதேச அளவில் லித்தியம் பேட்டரி ஓவர்சப்ளை அளவீட்டில் உள்ளது. இதனால் தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைய துவங்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications