டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பதாக மத்திய சுரங்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
4 ஆண்டுகளாக ஆய்வு
இந்திய புவியியல் ஆய்வு மையமானது கடந்த 2018 - 19ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வினை தொடங்கியது. தொடர்ந்து அப்போதில் இருந்து நடந்து வந்த இந்த ஆய்வானது, ஜம்மு காஷ்மீரிலும் நடத்தப்பட்டது.
இது தவிர கர்நாடகா, தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்திஸ்கர், ஓடிசா, ராஜஸ்தான், குஜராத், ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
இதே முதல் முறை
மேற்கண்ட இந்த 10 மாநிலங்களிலும் தங்கம், லித்தியம், மாலிடிப்னம் உட்பட 51 வகையான கனிம தொகுதிகளை கண்டறிந்துள்ளது. இதில் ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.
லித்தியத்தின் முக்கியத்துவம்
மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி, மின்சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி தயாரிப்பில் லித்தியம் மிக முக்கியமானதொரு பொருளாக உள்ளது. ஆக இவற்றின் இருப்பு என்பது இந்தியாவில் அதிகம் எனலாம்.
தன்னிறைவு பெற உதவும்
இந்தியாவில் லித்தியத்திற்கான தேவை என்பது அதிகம். ஆனால் போதியளவு இறக்குமதி செய்ய முடியாமல் இருந்து வருகின்றது. தற்போது வரையில் இந்தியா பிற நாடுகளை சார்ந்துள்ளது. ஆக இந்த கண்டுபிடிப்பானது இந்தியா தன்னிறைவு பெற உதவும்.
பேட்டரியில் முக்கிய மூலதனம்
லித்தியம் என்பது ரீசார்ஜபிள் பேட்டரி உற்பத்தியில் முக்கிய மூலதன பொருளாக உள்ளது. இது லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியா பெரும்பாலும் லித்தியம் தேவைக்காக சீனாவினையே அதிகம் சார்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த லித்தியம் இருப்பானது, நிச்சயம் ,மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ள ஒரு விஷயமாக இருக்கும்.
இந்தியாவின் வளர்ச்சி
இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா யாரையும் சார்ந்து இல்லாமல், குறிப்பாக சீனாவினை எதிர்பார்க்காமல் இருக்க பயனுள்ள ஒன்றாக இருக்கும். இது இந்தியா சர்வதேச சந்தைகளில் முக்கிய பங்குகளிக்கும் ஒன்றாக உதவும். இன்றும் லித்தியம் சந்தையில் சீனாவின் பங்கு 60% ஆகும்.
சீனாவுடன் போட்டியிட வழி
இருப்பினும் இதில் பற்பல சவால்கள் உள்ளன. இந்த லித்தியம் பிரித்தெடுக்கும் முறையானது மிகவும் சிக்கலானது. ஆக இது கடினமானது தான் என்றாலும், சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டால், இந்தியா சீனாவுடன் போட்டியிட இது வழிவகுக்கும்.
சார்பு குறையும்
சீனா மட்டும் அல்ல, லித்தியம் அயர்ன் பேட்டர்களுக்காக இந்தியா மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வழிவகுக்கும். குறிப்பாக சீனாவின் சார்பு என்பது குறையும். மேலும் இந்தியா மின்சாதனங்கள் உற்பத்தியில் சீனாவினை தாண்டி சாதனை புரிய இது வழிவகுக்கும். மொத்தத்தில் இது ரொம்ப நல்ல செய்தி தான் என்றாலும், இது செயல்பாட்டுக்கு வரும்போது தான் இது சாத்தியமான ஒன்று.


Click it and Unblock the Notifications