ராஜஸ்தானின் தேகானா (Degana) என்னும் பகுதியில் லித்தியம் கணிம இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கம் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு (ஜிஎஸ்ஐ) அதிகாரிகள் கூறுகையில், ஜம்மு & காஷ்மீரில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இருப்புக்களை விட அதிகமா லித்தியம் இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த உலகமும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வரும் வேளையில் இந்தியாவில் அடுத்தடுத்து லித்தியம் கணிம இருப்பு கண்டுப்பிடிக்கப்பட்டு வருவது வியக்க வைக்கும் விஷயமாக மட்டும் இல்லாமல், EV துறையில் உலகின் முன்னோடியாகவும் உயர வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஜம்மு & காஷ்மீர் பகுதியில் லித்தியம் இருப்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளதாக பிப்ரவரியில் முதல் முறையாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பில் ஜம்மு & காஷ்மீர் பகுதியில் இருக்கும் ரியாசி மாவட்டத்தில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு கூறியது.
இந்த நிலையில் இந்தியாவில் இரண்டாவதாக ராஜஸ்தான் மாநிலத்தில் தேகானா (Degana) என்னும் பகுதியில் லித்தியம் கணிம இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது மட்டும் அல்லாமல் இந்த பகுதியில் கிடைத்துள்ள லித்திய இருப்பின் அளவு நாட்டின் மொத்த தேவையில் 80 சதவீதத்தை பூர்த்தி செய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லித்தியம் இருப்புகள் ராஜஸ்தான் மாநிலத்தின் தேகானா-வின் ரென்வட் மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே இடத்தில் இருந்து தான் டங்ஸ்டன் உலோகம் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்பட்டது. டங்ஸ்டன் கனிம இப்பகுதியில் 1914 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

லித்தியம் உலகின் மிக இலகுவான மற்றும் மென்மையான உலோகமாகும், இந்த கனிமம் சேமித்து வைக்கும் கெமிக்கல் எனர்ஜியை எலக்ட்ரிக் எனர்ஜியாக மாற்றும் வல்லமை கொண்டது. லித்தியம் ஒரு இரும்பு அல்லாத உலோகம், மேலும் எலக்ட்ரிக் வாகனங்களை இயக்கும் பேட்டரிகளில் உள்ள முக்கிய கூறுகளில் ஒன்று லித்தியம்.
இந்தியா எலக்ட்ரிக் வாகனங்களை இயக்கும் பேட்டரிகள் உருவாக்க தேவையான லித்தியம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற பல கனிமங்களுக்கு இறக்குமதி செய்து தனது தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானிஸ் கிடைத்துள்ள லித்தியம் கனிமம் இந்தியாவின் EV பயணத்திற்கு வலிமை சேர்க்க உள்ளது.
தற்போது, உலகின் ஒட்டுமொத்த லித்தியம் உற்பத்தியில் 47 சதவீதத்தை ஆஸ்திரேலியாவிலும், 30 சதவீதம் சிலி நாட்டிலும், 15 சதவீதம் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேவேளையில் உலகின் ஒட்டுமொத்த லித்தியம் இருப்பில் சீனா 58 சதவீதத்தையும், சிலி 29 சதவீதத்தையும், அர்ஜென்டினா 10 சதவீதத்தையும் வைத்துள்ளது.
2020 முதல் 2021 வரை இந்தியா ரூ.6,000 மதிப்புள்ள லித்தியத்தை இறக்குமதி செய்தது. இதில் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான லித்தியம் சீன நாட்டில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. லித்தயம் உலோகம் கார், பைக் பேட்டரிக்கு மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன், லேப்டாப் என அனைத்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகளிலும் பயன்படுத்தப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications