உலக அளவில் புலம்பெயர்ந்த நாடுகளின் பட்டியலில் குறைந்த செலவில் வசதியான வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற இடமாக இந்தியா 6-வது இடத்தில் உள்ளது என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இதனை இன்டர்நேஷனல் ஸ்டடி நிறுவனம் அறிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு, நிதி நிலைமையில் திருப்தி, மற்றும் குடும்ப வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
2024 இன்டர்நேஷனல் ஸ்டடி ஆய்வின்படி, புலம்பெயர்ந்தோருக்கு உலகில் மிகவும் குறைத்த செலவைக் கொண்ட நாடு வியட்நாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கைத் தரம், வீடு மற்றும் மொழி, தொழில் வாய்ப்புகள், சம்பளம் மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பில், உலகளவில் 174 இடங்களில், 12,000-திற்க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பங்கேற்றனர். இதில் வாழ்க்கைச் செலவு, நிதி நிலைமையில் திருப்தி, மற்றும் குடும்ப வருமானம் ஆகியவை வசதியான வாழ்க்கையை நடத்த போதுமானதாக உள்ளதா? என 3 பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நிதி நிலை அடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு ஏற்ற முதல் 10 இடங்கள்:
1. வியட்நாம்
2. கொலம்பியா
3. இந்தோனேஷியா
4. பனாமா
5. பிலிப்பைன்ஸ்
6. இந்தியா
7. மெக்ஸிகோ
8. தாய்லாந்து
9. பிரேசில்
10. சீனா
ஆசிய நாடுகள் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. முதல் 10 இடங்களில் 6 இடங்கள் ஆசிய நாடுகளால் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.
இன்டர்நேஷன் நிறுவனத்தின் மார்கெடிங் அதிகாரி கேத்ரின் சுடோபா, "தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற இடங்களில் வாழ்க்கை நடத்துவதற்கு எளிதாக வீடுகளை கண்டுபிடிக்க முடியும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வீட்டைக் கண்டுபிடிப்பது இங்கு எளிது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
2024-ஆம் ஆண்டிற்கான குறைந்த செலவில் வாழ்க்கை நடத்த ஏதுவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த அறிக்கையின்படி, வியட்நாமில் பொதுவாக, "குடும்ப வாழ்க்கை மற்றும் work-life balance தொழில் முன்னேற்றத்தை விட முன்னுரிமை பெறுகிறது" என்றும், நாட்டின் வெளிநாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானோர் (46%) மட்டுமே முழு நேரம் வேலை செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஒரு பிரிட்டிஷ் வெளிநாட்டவர் , "வியட்நாமில் உள்ள வாழ்க்கை எனக்கு மன அழுத்தம் இல்லாமல் வைத்திருக்கிறது, எனது நீண்ட நேர வேலை வாழ்க்கையிலிருந்து ஒரு அற்புதமான மாற்றம் இங்குள்ள வாழ்க்கை" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications