பிரிட்டன் நாட்டின் பொருளாதாரமும் சரி, ஆட்சியும் சரி மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதைப் பிரமதராகப் பதவியேற்றிய லிஸ் ட்ரஸ் 45 நாளில் ராஜினாமா செய்துள்ளது மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
பிரிட்டன் பிரதமரான லிஸ் ட்ரஸ் மற்றும் முன்னாள் நிதியமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்க் இணைந்து அறிவித்த மினி பட்ஜெட் பிரிட்டன் பத்திர முதலீட்டுச் சந்தையைப் புரட்டிப்போட்டது.
இதன் பின்பு அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் பிரிட்டன் பொருளாதாரத்திலும், ஆட்சியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ் பிரிட்டன் நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து சொந்த கட்சியில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொண்டு வந்தார். இதற்கிடையில் மோசமான மினி பட்ஜெட் காரணமாகக் குவாசி குவார்டெங்க் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த ஒரு வாரத்திலேயே உள்துறை அமைச்சராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் பணிநீக்கம் செய்தார்.
ராஜினாமா
இந்த நிலையில் தான் பிரதமர் பதவிக்காகப் போட்டியிடும் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அடுத்த ஒரு வாரத்தில் புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரையும் தேர்வு செய்யும் தேர்தல் நடக்க உள்ளதாக லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்
இந்த நிலையில் ஏற்கனவே பிரதமர் பதவிக்குப் போட்டிப்போட்ட ரிஷி சுனக் மீண்டும் போயிட்டு வெற்றி பெறுவார் என அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேவேளையில் லிஸ் ட்ரஸ் புதிதாக நியமித்த பிரிட்டன் நிதியமைச்சரான ஜெர்மி ஹன்ட் மற்றும் தற்போது உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சுயெல்லா பிரேவர்மேன் ஆகியோர் போட்டிப்போடுவார்கள் எனத் தெரிகிறது.
தொழிலாளர் கட்சி (எதிர் கட்சி)
இந்த நிலையில் பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) வியாழனன்று உடனடியாகப் பொதுத் தேர்தலைக் கோரினார். 12 வருடமாகப் பிரிட்டன் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்தும், சாமானிய மக்களுக்கு அதிகப்படியான சுமையை ஏற்படுத்தியும் வரும் வேளையில் பொதுத் தேர்தல் பிரிட்டன் மக்களுக்கு மிகவும் அவசியம் எனக் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 28
மேலும் புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரையும் தேர்வு செய்யும் தேர்தல் அக்டோபர் 28 ஆம் தேதி நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் கன்சர்வேடிவ் கட்சி சுமார் 12 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications