பிரிட்டன் பிரதமராக இருக்கும் லிஸ் ட்ரஸ் வியாழக்கிழமை (இன்று) தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார்.
லிஸ் ட்ரஸ் அறிவித்த பொருளாதாரத் திட்டத்தால் அந்நாட்டு முதலீட்டுச் சந்தைகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது, மேலும் லிஸ் டிரஸ் பிரதமராக நியமிக்கப்பட்ட 6 வாரங்களில் அவர் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியில் பெரிய பிளவு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் புதிய பிரதமருக்கான தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர் தங்கும் 10 டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்திற்கு வெளியில் பேசிய லிஸ் ட்ரஸ் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை டிரஸ் ஒப்புக்கொண்டும், தனது கட்சியின் நம்பிக்கையை இழந்துவிட்டதாலும் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியில் இருந்தும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வது குறித்து பிரிட்டன் அரசரான சார்லஸ்-யிடம் பேசியதாகவும் தெரிவித்தார் லிஸ் ட்ரஸ். மேலும் இன்று காலை நான் 1922 கமிட்டியின் தலைவர் சர் கிரஹாம் பிராடி-யை சந்தித்தேன். அடுத்த வாரத்திற்குள் தலைமைக்கான தேர்தல் நடத்தப்படும் என்று முடிவு எடுத்துள்ளோம் எனவும் கூறினார்.
45 நாள்
இந்த முடிவு நாட்டின் நிதித் திட்டங்களைச் சரியான முறையில் கையாளுவதற்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் உறுதி செய்யும் என பேசினார் லிஸ் ட்ரஸ். இவர் வெறும் 45 நாளில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மினி பட்ஜெட்
லிஸ் டிரஸ் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்த மினி பட்ஜெட் மக்கள் மத்தியிலும், முதலீட்டு சந்தையில் அதிகப்படியான தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பிரிட்டன் பிரதமரான லிஸ் டிரஸ் நிதியமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்க்-ஐ இப்பணியில் இருந்து நீக்கிவிட்டு ஜெர்மி ஹன்ட்-ஐ நியமித்தார்.
இரு முக்கிய திட்டங்கள்
லிஸ் ட்ரஸ் - குவாசி குவார்டெங்க் கூட்டணி முதல் முறையாக அறிவித்த திட்டத்தில் 1,50,000 பவுண்டுக்கு அதிகமாக வருமானம் பெறுபவர்கள் மீது விதிக்கப்படும் 45 சதவீத வரியை நீக்கவும், கார்ப்பரேட் வரியை 19 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை ரத்து செய்வது என இரு திட்டங்கள் அறிவித்தார்.
ரிஷி சுனக்
இவ்விரு திட்டங்களும் மக்கள் மத்தியிலும், முதலீட்டுச் சந்தையிலும் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த சில நாட்களில் இரண்டு திட்டங்களையும் திரும்பப் பெற்றார். இந்த நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கான தேர்தல் ஒரு வாரத்தில் நடக்க உள்ள நிலையில் மீண்டும் ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா..?
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications