பிரிட்டிஷ் அரசுக்கு சூரியன் மறைவே இல்லை என கூறும் அளவுக்கு உலகின் பல பகுதிகளிலும் பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் பல நூறு ஆண்டுகளாக பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர். அப்போது நம் வளங்களையும் சுரண்டி சென்றனர்.
அப்படிப்பட்ட பிரிட்டிஷ் அரசுக்கே ஒரு இந்திய குடும்பம் கடன் கொடுத்திருக்கிறது என்ற ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருடைய வாரிசுகள் பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த கடனை திரும்ப வட்டியோடு தங்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என கேட்கின்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவேக் என்பவர் 1917 ஆம் ஆண்டு தன்னுடைய தாத்தா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 35,000 ரூபாயை கடனாக கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.

இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த கடனை திரும்ப வழங்கவில்லை என்றும் தற்போது வட்டியோடு சேர்த்து அந்த தொகையை திரும்பத் தர வேண்டும் எனக் கூறி பிரிட்டிஷ் அரசுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக விவேக் தெரிவித்திருக்கிறார். அப்போது கொடுத்த 35 ஆயிரம் ரூபாயை தற்போது வட்டியோடு சேர்த்து 12 கோடி ரூபாய்க்கு மேல் வரும் என சொல்லப்படுகிறது.
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு தன்னுடைய தாத்தா கடன் வழங்கியதற்கான ஆவணம் தன்னிடம் இருப்பதாக விவேக் பழைய ஆவணம் ஒன்றையும் காட்டுகிறார். மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள சேகோர் என்ற பகுதியில் உள்ள சேத் ஜும்மால் ருதையா என்ற நபரிடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் 35,000 ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறது. 1917ஆம் ஆண்டில் ஜூன் 4ஆம் தேதி கடன் வாங்கியது அந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ளது.
அந்த காலத்தில் அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பு 35 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அந்த பணத்தை வைத்து பிரிட்டிஷ்காரர்கள் போபாலில் தங்களின் ஆட்சியை வலுப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. போர் கடன் என்ற பெயரில் இந்த கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கடன் வாங்கியதோடு சரி அதனை திரும்ப தரவே இல்லை என குறிப்பிட்டு இருக்கின்றன.
சமீபத்தில் தான் இந்த ஆவணம் தங்களுக்கு கிடைத்ததாகவும் போர்க்கடன் என்ற பெயரில் இந்த கடன் வாங்கப்பட்டுள்ளது , பின்னர் கடன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் விவேக் கூறியிருக்கிறார். 1937ஆம் ஆண்டிலேயே தன்னுடைய தாத்தா இறந்து விட்டார், அதன் பிறகு அந்த தொகை பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்காமல் சென்று விட்டது எனக் கூறியிருக்கும் விவேக் சர்வதேச சட்டங்களின்படி இந்த தொகையை திரும்ப பெறுவது சாத்தியமா என ஆய்வு செய்து வருவதாக கூறியிருக்கிறார்.
வட்டியோடு சேர்த்தால் தற்போது 12 கோடி ரூபாய்க்கு மேல் அந்த தொகை வரும் என சொல்லப்படுகிறது. வழக்கறிஞர்கள் இந்த கடனை திரும்ப பெறுவது சட்ட சிக்கல்கள் நிறைந்தது என்கின்றனர். இருந்தாலும் தங்களிடம் ஆவணங்கள் இருப்பதால் லீகல் நோட்டீஸ் அனுப்பி பணத்தை திரும்ப பெறுவதில் உறுதியாக இருப்பதாக கூறுகின்றனர் விவேக் குடும்பத்தினர்.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications