தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர லாக்டவுன்.. நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் அனுமதி உண்டா?

எதெல்லாம் நடக்க கூடாது என பயந்து கொண்டிருந்தோமோ? அதெல்லாம் ஒன்று ஒன்றாக நடந்து கொண்டுள்ளது. இரண்டாவது போய்விட்டது என நிம்மதியாக இருந்த மக்கள், தற்போது மூன்றாவது அலையை கண்டு அஞ்சி ஒதுங்க ஆரம்பித்துவிட்டனர்.

நாளுக்கு நாள் ஓமிக்ரான், கொரோனா வைரஸ் என போட்டி போட்டுக் கொண்டு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பரவலைக் கட்டுப்படுத்த தேவையெனில் கட்டுப்பாடுகளை முன்னதாக மத்திய அரசு கூறியிருந்தது.

இந்த நிலையில் இது குறித்து பல்வேறு மருத்துவ ஆலோசகர்கள் என பல தரப்பிலும் ஆலோசனை செய்யப்பட்ட நிலையில், வரும் வாரத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை முழு லாக்டவுன் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள்

பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள்

தற்போது சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிலும் மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மேற்கண்ட மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இரவு நேர கட்டுப்பாடுகள்

இரவு நேர கட்டுப்பாடுகள்

இதற்கிடையில் தமிழ் நாட்டிலும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு தினங்களாக ஆலோசனை செய்து வந்த தமிழக அரசு, நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அனைத்து வணிக வளாகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் இயங்கலாம்

இந்த நிறுவனங்கள் இயங்கலாம்

இந்த நிலையில் உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இங்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை பயன்படுத்தி செல்லலாம். எனினும் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறு, தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

ஞாயிற்று கிழமைகளில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல், இரவு 10 மணி வரையில் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சேமோட்டோ நிறுவனங்களும் மேற்கண்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்து சேவைத் துறைகள் என, மக்கள் கூட்டாமாக கூடும் இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதேபோல இரவு நேர கட்டுப்பாடுகளின் போது ஊழியர்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் நிறுவனத்தின் அடையாள அட்டை, இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+