ஈரான் போர் காரணமாக இந்தியாவிற்கு எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் வரத்து நின்று போயிருக்கிறது. ஒரு மாத காலமாக எரிபொருள்கள் வராததால் நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போதைக்கு வீட்டு உபயோக சிலிண்டர் டெலிவரிக்கு முக்கியத்துவம் கொடுத்து வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு கட்டுபாடு விதித்துள்ளது.
மத்திய அரசு பல்வேறு நாடுகளிடம் இருந்தும், மாற்று ஆதாரங்கள் மூலமாகவும் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு போதிய இருப்பு இருப்பதை உறுதி செய்து வருகிறது. இன்றைய தினம் பெட்ரோல் மீதான கலால் வரியை 3 ரூபாயாக குறைத்தும், டீசல் மீதான கலால் வரியை முற்றிலுமாக நீக்கியது.

இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் ஈரான் போர் தாக்கம் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா காலத்தை போன்ற பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கலாம் எனக் கூறியிருந்தார். இதனை அடுத்து நாடு முழுவதுமே இந்தியாவில் மீண்டும் கொரோனா போன்ற லாக்டவுன் வரப்போகிறதா என்று குழப்பம் ஏற்பட்டது. சமூக வலைத்தளங்கள் மற்றும் கூகுளிலும் மீண்டும் லாக்டவுன் என்பது தான் டிரெண்டிங்காக மாறியது.
இந்த சூழலில் தான் பிலிப்பைன்ஸ் நாடு தங்கள் நாட்டில் எனர்ஜி லாக்டவுனை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அடுத்ததாக இந்தியாவிலும் இதே போன்ற ஒரு சூழல் உண்டாகலாம் என தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் எங்கும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சூழலில் இந்தியாவில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி, இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறது என பரவும் தகவலில் உண்மை இல்லை, அது வெறும் வதந்தி என கூறியிருக்கிறார். லாக்டவுன் கொண்டு வருவதற்கான எந்த ஒரு ஆலோசனையும் மத்திய அரசு செய்யவில்லை என திட்டவட்டமாக அவர் தெரிவித்திருக்கிறார்.
மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கும் வகையில் இது போன்ற வதந்திகளை பரப்புவது பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை உண்டாக்குகிறது எனவே இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார். இந்தியாவில் லாக் டவுன் போடுவதற்கான வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.
கடந்த ஒரு மாத காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலர்களில் இருந்து 122 டாலராக உயர்ந்திருக்கிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது ஆனால் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். பொதுமக்களின் நிதிச் சுமையை அரசு தன் மீது சுமத்திக் கொண்டிருக்கிறது எனக் கூறியிருக்கும் அவர் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 24 ரூபாயும் ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையிலும் 30 ரூபாயும் நஷ்டம் அடைகின்றன எனக் கூறியுள்ளார்.
மக்களுக்கு எந்த ஒரு சிரமமும் வந்து கூடாது என அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுத்து வருகிறது என கூறி இருக்கும் அவர் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் லாக்டவுன் போடப்படுவதாக வரப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை அப்படி எந்த ஒரு ஆலோசனையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என கூறியிருக்கிறார். இது போன்ற சவாலான சூழ்நிலைகளில் பொறுப்புடனும், ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இருப்பது தான் முக்கியம் எனக் கூறியிருக்கும் அவர் இது போன்ற தேவையற்ற வதந்திகளை பரப்புவது தவறு என தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

பெட்ரோல் விலை ரூ.119, டீசல் விலை ரூ.127..!! இந்த மாத கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கு மக்களே!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications